கரங்களே இல்லாத
முட்போர்வையில் சிக்கி தவிக்கிறது
இன்று பிறந்துவிட்ட மைனாகுஞ்சி .
அந்த தாய் குருவியின்
சிறகுகளின் வேகத்தில்
கண் விழித்து
காணொளி காட்சியை
கட்டுடைதைத்தது
இன்றைய மௌன உலகம் !
தான் படுதிரிந்த
வைக்கோல் சூட்டை விட
சூரிய கதிர்களின் பாய்ச்சல்
சற்று விதமான
புது சுகத்தை அள்ளி
பருகி கொண்டு இருந்தது ..
மரத்தில் ஊரும எறும்புக்கு கூட
இது இறை என்றால்
மிகையாகது!
மஞ்சள் வெயிலில்
இலையுதிர் காலம்
மரத்தின் சுபிச்சத்தை
வேரோடு அறுத்துவிட்டு
முகில்களை வரவேற்கும்
சருகளை கீழ செல்
என்றே கட்டளையிட்டுருந்தது !
ஒரு சில வினாடிகளில்
குட்டி மைனாவின்
மூக்கின் ரகசியத்தை
சருகுகளும் உரசியே
கண்டுக்கொண்டன!
பாதாள உலகின்
நிரந்தர பசி யாட்கையில்
சிறகுகள் ஓடியும்
முன்னரே
இரு சொட்டு குருதி ஓட்டத்தில்
ஒடிந்து விழுந்த
கூர் குச்சி குற்றி
விபோச்சனம் பெற்றது
யார் செய்த குற்றம்?