அலைகடலென தாவி வரும்
ஆறடி அறிவே
அன்பில் தத்தளிக்கும்
மழையின் மாங்குயிலே
பொன்மேக சிரிப்பே
பூங்காவன சிலிர் பில்லே
சின்ன சிறு குருவியே
சிற்றிடை நதியே
வாதம் செய்து வார்த்தைகளில்
வதம் செய்ய துடித்து
பின்தொடரும் அருவியே
தென்னை ஒளியே
தேன்மதுர சுவை பேச்சே
அடங்காமல் கதிர் வீசும் நெற்றியே
சாலையிடும் பாதமே
கோலமிடும் வெட்கமே
நளினத்தின் சுளியே
நாதத்தின் மொழியே
தேவதாயின் மகளே
தேடலின் பசியில் ஒளிந்து
தீராத ஆசையில் விழைந்து
எங்கே மூழ்கிவிட்டாய்
தூக்கம் கலைத்து
விழி வாசிப்பாயா
இந்த உலகம் கவர்ச்சியாய்
உடை அணிந்து விட்டது
பார்த்து விட்டு போ ............

good ya
ReplyDeletecomment my web site also
http://eyepicx1.blogspot.com/