நான் சோம்பேறியாய்
உறங்கி கொண்டிருப்பேன்
நீயோ வெள்ளன எழுந்து
பொது தேர்வின்
இறுதி நேர எழுதுகோல்
போல்
விரைவாய் ஓடி
கொண்டிருப்பாய் ....
பற்பசை எடுத்து குளியல்
முடிக்கவே
பாதி நேரம் எனக்குள்
முடிந்துவிடும்
நீயோ
என்னை பார்த்து
பார்த்து
ரசித்தே பாதி காலத்தை
முடித்து விட்டாய்
..........
ஈன்ற முதல்
ஆயுள் நீங்கும் வரை
அன்றாடம் என் தேவையை
தேடி பிடித்த தேவதையே
நீ தந்தவை எல்லாம்
என்னுடன் நினைவுகள்
அல்ல
வளர்த்து விட்ட கனவுகள்
......
அதுவும் ஆலமரமாய்
வளர்ந்து விட்டது
உன் வியர்வை
அடி வேறாய்
பின்னலுட்டது !
இதோ உன் புகழை
விழுதுகளாய் தோரனமிட்டு
நன்றி மறவாமல்
சிறகடித்து விண்ணை
நோக்கி
முயல்கிறது சோம்பேறி
பச்சக்கிளி !