
உலகெங்கும் உள்ள மனிதம்
பாரிய வலை பின்னும்
மேற்கத்திய கலாச்சாரத்தின் அல்ல
கிரேக்க நாகரித்தின்
புத்துயிர் வழி காட்டி
ஆங்கில புத்தாண்டை
வரவேற்கும் வேலையில் ,
சக நண்பர்களுக்கும்
சக உறவினர்களுக்கும்
சக சமூகத்தினருக்கும்
சக உயிர் வாசிகளுக்கும்
ஒன்றை மட்டும் தெளிவாய்
கடமை பட்டு இருக்குறேன் .
வருடங்கள் வந்து
தான் போகின்றன
வாழ்கையும் நகர்ந்து
தான் போகின்றன
சீற்றத்தின் உச்சியில் உலகே
உருமாற காத்து இருக்கிறது
நம்மால் முடிந்த வரை
உதவிகளை செய்வோம்
பிறர் செய்யும்
துணை இல்லாமல் நிற்போம்
உரக்க சத்த மிட்டு சொல்லுவோம்
வெள்ளை புறாவின்
காலில் கட்டி அல்ல
அதற்கு முன் வான் முட்டும்
நம் உணர்வுகளின் வழியே
இடிமுழங்க
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .