Tuesday, 31 August, 2010

வெங்காய உலகம்ரார் கூறுவார்
ஆண்பிள்ளை
ழுதல் சிறுபிள்ளைத்தனம்
வயதால் நிர்ணயிக்கபடுமா

மீறினால்
சிறித்தே பழகிய
உலகம்
குமுறத்தொடங்கும் ஓர்
வெங்காய உரியலில் ..........

பனிப்பூக்கள்


ண்ணத்தை அள்ளி
பூசி கொண்ட
மாலை வெயிலே
தீர்த்தகரையில் மடிசையந்த
ரகசியத்தை
நதியானவள் மறைத்துவிட்டால்

புது சாபத்தின்
விமொச்சம் பெற்றுக்கொண்ட
வெண்ணிலவின் வருகையை  
நட்சத்திரத்தின் காலாட்படை
வரவேற்கையில்

ந்த்ரோதயம் காணும்
பொன்மாலையில்
னிப்பூக்கள் அடிவருடியாய்
அழுது வடிக்கும்
கண்ணீரை

துடைத்து எடுக்கும்
கைகள் யாருடன் ...............................

Monday, 30 August, 2010

புகழி


ளைந்து போகும்
வான்வெளியில்
காற்றில் பறக்குது
இந்த கானல் பறவை

காணாது கண்டான்
செய்தியுடன்

மிழி வைக்கும்
வாய்வழியே
வந்து இறங்கியுதும்
ஓர் மணிமகுடம்
தலையில் நின்று
வெய்து ஏங்கும்

ற்றொரு நாழிகையில் 
நிழல் இதயத்தில்
டைந்து தொங்கும்
வெத்துப்  புகழ்!பேசும் சக்தி


றக்க பேசும் பழக்கம்
புழுக்கத்தில்
உருமாறிய விதை
தீண்டி தீண்டி

கீறலில் வேர்கொண்டு
வீர்யென்று மெருகேறும்  
ஓர் கடினமான வியப்பு
பேச்சாளன் !

Sunday, 29 August, 2010

ஊராம் வீடு


சித்திரை என்றதும்
விழாக்காலம்
சில
ஈர விழிகளை கடந்து
செல்லும் கனாக்காலம்

தனின் முதல் வாரம்
தேர் இழுத்து
கை பழுத்து
உன் வீடு வருகையில்
நீர் சுமந்து பானையுடன்

நீ வருகையில்
இளமையின் இனிமையை
வருடி கொன்று இருப்பாய்

டுத்து வாரம்
ஏதொரு சாக்கில்
சந்திக்க நினைத்து
ஆற்றங்கரையின் மணலில்
நிலாச்சோறு கொண்டு
வெண்ணிலா
மண்ணின் மடி இறங்குவாள்

சூடுபட்ட சொற்களால்
உன் உறவினன்
ஏசி பார்த்தும்
திருந்தாத 
நாய்குட்டியாய்
வீடு வரை காவல்
வந்து சென்றிருப்பேன் !

நீர் இறங்கி
விலகி செல்லும்
இலைகள்
தலை அசைத்து
ஒரு சுகத்தை வேண்டுமாம்

குறுக்கும் நெடுக்கும்
இறுதி வாரத்தில்
நத்தையாய் ஊறி
நாணலாய்  வளைந்து
கீற்று கொட்டகையாய்
ஒடிந்து இருப்பேன்

நீயும் ஏறுமுகமிட்டு
ஒரு சொல்லில் கனவுகளை
கலைத்து விட்டாய்

டுத்த திருவிழாவில்
பார்ப்போமென்று!


நேர்க்காணல்பொங்கி எழும்
பெருங்கடலே
நீ கடந்து வந்த
சுவடுகளை
என் காதில் செல்லமாக
உரைப்பாயா ?

உன் உச்சியை
தொட்டு பார்க்க
எனக்கும் ஆவலே

இருந்தும் என்னை
மூழ்கடிப்பதிலே
எந்த சுகத்தை
கண்டுவிட்டாய்!

உன் பாதத்தில்
முத்தமிட்டு
என் முகாதரத்தை
துளைத்துவிட்டு

கோடானகோடி சிறுப்பிள்ளைகளில்
ஒருவனாய் திகழ்வதில்
எனக்கும் ஆவலே

நீ
நீலமாய் நிற்கையில்
நீளம் கொண்ட
கண்களுக்கும்
சோகம் தாக்காமல்
அழுகையை
சோதித்து பார்க்கும்
தோழன் நீயன்றோ...............

கரையில் இருந்தால்
அள்ளிக்கொள்கிறாய்
மீறி
உள்ளே  வந்தால்
உலா வந்து
தள்ளிவிடுகிறாய்

உன் விடுகதையின்
விடை என்ன
யார் உனது
உறவாளி  
விஞ்ஞானம் காண
முடியா
நெஞ்சுயிர்  பாட்டி..........................
Friday, 27 August, 2010

கர்பிணி சிரிப்புகள்மலரின் மவுனத்தை
மழலை பற்றி
கையில் பிடித்து
கனவு கண்டு
உறங்கியதாம்

அதிர கனவுகள்
ஆறாம் மாதத்தில்
பிள்ளைக்கு
ஓர் முளை விடும்
பயிர் காலமாம்

திரும்பிய திசையெல்லாம்
வலி குடுக்க
தாய்மை உற்சாக வெளிப்பாடாய்
தடவிக்கொண்டே 
கைவைத்து தட்டுவாலாம்

சும்மா இருக்க
மாட்டியா என்று

கருவறையில் கண்ட
அந்த நிலா உலகம்
இன்று பவுர்ணமியாய்

அவள் முகத்தில்
உதித்து
ஐந்து நாழிகை
கடந்துவிட்டன!

பிள்ளையும் பிறந்து
விட்டான்
அழுகை கொண்டு
சத்தமிட்டு சொன்னான்
நான் இருக்கிறேன்
நீ கலங்காதே !


Thursday, 26 August, 2010

கீதாஞ்சலி


யாரையும் நாங்கள்
ஏசிப்பார்க்க நினைக்கவில்லை
வறுமையின் பிடரியில்
தலையினை தைப்பது
வசதியானவனின் கைத்தொழில்!

காது குடுத்து
கேட்கும் பொருட்டு
இசைக்கும் பாடல்
நல்இதயங்களுக்கு கீதாஞ்சலி!

உழைக்கவே நினைத்து
அல்லும் பகலுமாய்
சாலைகளின் ஓரத்தில்
தெருமுனை கூட்டமிட்டு
குயில்கலாய் கூவிக்கிடக்கிறோம்!

எங்கிருந்தோ வந்த
சிறுமை படைத்த
காகம் எச்சமிட்டு
போனாலும்

உறக்க பாடும் குரலுக்கு
தெரியும்
நாம் பிச்சையெடுக்கவில்லை!

பிழைப்புடன் வாழும்
எழைகளாயினும் இறக்கத்துடன்
வருவோருக்கு தெரியும்
கீதாஞ்சலியின் கம்பீரம்
ருசிப்பார்க்கும் குரல் வளம் !


Friday, 20 August, 2010

செல்லக்குழந்தைகள்இரு குழந்தைகள்
கட்டிலிலே
நிர்வாண குளியல்
தொடங்கயிலே

அன்பை அளவில்லாமல்
எடுத்து
ஓர் உயிராய் இணைத்து
பூமாலை ஒன்றை தொடுத்தார்

அரைமணியோ ஒருமணியோ
நேரம் அங்கே
அடிமையாக்கப்பட்டது

புது புது வாசத்துடன்
மூக்கும் மர்மத்தை
நீண்டு கொண்டு இருந்தது

உடல் வானில் காயப்போட்ட
துணியாய்
ஈரம் உலர்ந்து
சூட்டை கைப்பற்றியது!

தொடுத்த மாலை உதிர
வழி பிறந்ததால்

கார்மேக கைகளும்
கிளியோவிய கால்களும்
பிரிந்து செல்கின்றன!

அங்கே வயதான
கிழவன் நின்று
வாழ்ந்து சொல்கிறான்
மோகம் முப்பது நாள்
சொல்லியவன் ஒரு சோம்பேறியென்று!

Wednesday, 18 August, 2010

கறிகடையின் விளிம்பில்


கண்கள் இறகை கண்டு
வியந்து தான் போனது
பூமரத்தின் கிளையில்
தாவி
காற்றுக்கு சவாளிட்டு
வலிக்குது என்று கூச்சலிட்டு
சொல்லமால்
தரையில் விழுந்து விட
ஏங்கி
பிடித்திடும் கைக்களுக்கு
விளையாட்டு சொல்லி தந்து
கசக்க பட்டு உயிர் விட்ட
கோழி சிறகுகள்
நிதானமான உறக்கம் 

Sunday, 15 August, 2010

புத்தக வழி உறக்கம்ஏதோ ஒன்று
நினைவில் நின்று
காலத்தை ஒவ்வகப்படுத்தி
சந்திப்பின் இடையில்
ஏக்கத்தை
உபயம் செய்து
முற்றுப்பெறும்!

அப்பொழுதுகளில்
அலமாரியில் உறங்கிய
புத்தக குவியலை
திறம்பட புறட்ட
என்னை
வழி  நடத்தி சென்றிட
கைகளுக்கும் மூளைக்கும்
புத்துயிர் குடுத்துவிடு
ஆறாம் அறிவே!

எனக்கும் ஏழாம் அறிவு
இல்லயன்ற நாட்களை
அது கிழித்து போடும்!

புதுவன கழித்து
பழயன சிதைத்து
ஆக்கத்தை சிந்திப்போகும்
அந்த மழைத்தூறல்!

பயணத்தின் வருடலை
எனத்தாக முன்முயலும்
தீஞ்சுவை உண்டு
பல்சுவை கண்டு
விருப்பும் வெறுப்பும்
மாறி மாறி கதையின்
சுருக்கத்தில் நிலை இதுவே
என்றுரைக்கும் !

ருசியும் குதுகளித்து 
கானலின் விளிம்பில்
நடன மாடிய திசைகளை
அதுவும் வசைப்பாடும்!

நீண்டிருந்த
பதட்டத்தை துண்டாக்கி
ஊக்கத்தை உருவாக்கி
தூக்கத்தை பெற்றெடுக்கும் !

ஏ இரவே
மின்னொளியின் அலசலை
கண்டெடுக்க கனவுகளில்
நரம்புகளை புணர்த்தி
தசைகளை உயர்த்தி
நள்ளிரவில் பாலமிடு !

தூக்கமின்மை அறிவுக்கு
போதுமானதே
சுற்றி வரும் பூமியில்
சுழென்று எடுக்கும்
தேகத்தை
புதுசுகமிட்டு வரவேற்பாயா !

Thursday, 12 August, 2010

மரகத சிதறல்


அறுத்தெடுக்கும் மண்ணரிப்பின்
வாசம் வெளிவந்து
தூசிகளை தள்ளி
மூக்கின் நுனியில்
நாற்றத்துடன் படலம்
வாழ்க்கை !

கூறுவிட்ட அருவாமனை
பளிரென்று மின்னுவதாய்
வெளிச்சம் கக்கி
கண்கள் ஏற்ற இறக்க
சூசகத்தேடல் உலகம்!

நிலமே நீ வரண்டு விட்டாயோ
அறநெறியை காக்கும்
உடலின் அறிப்பை
தொடங்கிவிட்டாயோ!

பாதகத்தின் விளைச்சலுக்கு
துணை போராயோ!
கோடரி எடுக்கும்
கைகளை அடக்கி ஆள
நீ சுரண்டல் பேர்வளிகளை
அரசாட்சியில் அமர்த்தி
அழகு பார்க்கிறாயோ!

தீர்வு சொல் பூமரமே

விடிந்து முடியும்
விடியலிடும் வினவும்
தீர்க்கம் மாறா
பிள்ளை மனம்
கொட்டி சுரக்கும்
நீதி பால் எல்லாம்

கள்ளி வழி
கண்களுக்கு தொடுத்து
உதிரமாய் உதிரவிட்டாயோ !

தென்றல் வீசும் உன்
செவ்வான தோப்பில்
நான் காத்து நிற்பது
நல்லதொரு
தேவதுணை வேண்டியே !


Sunday, 8 August, 2010

பெண் தீண்டாமைஊடலே கொள்ளாமல்
இருக்கிறேன்
உன் உதவி கரம்
வேண்டுகிறேன் !

தார்மீக பொறுப்புகள்
ஒழிந்து வாழும்
ஏ இரவில்லா நகரமே!

அத்துமீறி ஓர் இருளை
அவனுக்கு அவிழ்த்து
புணர்ச்சியை பழகவிடு !

அவன் தேகசுகத்தின்
அமுதை அங்கீகரிக்க
ஓர் சட்டமிடு!

அது மரண தண்டனையாயின்
உயிரணுக்கள் மரண
ஒலமிட்டு வெளிவரும் !

பாருலகின் ஏழ்மையை
வேரறுக்க
புதுவிதை உருவாகட்டும் !

அன்றாவது தீரட்டும்
இந்த
கன்னிப்பெண்ணின்
தீண்டாமை!

Saturday, 7 August, 2010

எழுதி தீர்த்த மை


ஏ நிழலே
என் கையை இரண்டு
துண்டாய்  
நீ உடைத்து ஒரு
பாவனைச்செய்!

அதனை ஓர் சிற்பியின்
கண்களுக்கு வரமாய்
குடுத்துவிடு !
கலைகள் வளர்ந்து
அவன் கைகள்
ஓங்கட்டும்!

ஏ மரமே
உன் பூக்களை சிதறாமல்
ஒன்றாய் கோர்த்து
அழகை வடித்துவிடு!
அதனை ஓர் ஓவியனின்
பார்வையில் கானொளியிடு !
காகித பூக்களாவது
கண்ணாடி குடுவையில்
இறக்காமல் போகட்டும்!

ஏ இதயமே
நின்று போக மறந்திருப்பாய்
அந்த நாசியின் ஒட்டம்
ரத்தத்தில் சூடாய் மாறுது
குளிர வைத்துக்கொள் !
உனக்கென ஓர்
குளிர்சாதன பெட்டி
வந்து இறங்கியுள்ளது !

கலைகள் ஓங்கி
கண்ணாடியில் உறங்கி
ஆளுறக்கம் இந்த
கலைவாசி!