Saturday, 7 August 2010

எழுதி தீர்த்த மை


ஏ நிழலே
என் கையை இரண்டு
துண்டாய்  
நீ உடைத்து ஒரு
பாவனைச்செய்!

அதனை ஓர் சிற்பியின்
கண்களுக்கு வரமாய்
குடுத்துவிடு !
கலைகள் வளர்ந்து
அவன் கைகள்
ஓங்கட்டும்!

ஏ மரமே
உன் பூக்களை சிதறாமல்
ஒன்றாய் கோர்த்து
அழகை வடித்துவிடு!
அதனை ஓர் ஓவியனின்
பார்வையில் கானொளியிடு !
காகித பூக்களாவது
கண்ணாடி குடுவையில்
இறக்காமல் போகட்டும்!

ஏ இதயமே
நின்று போக மறந்திருப்பாய்
அந்த நாசியின் ஒட்டம்
ரத்தத்தில் சூடாய் மாறுது
குளிர வைத்துக்கொள் !
உனக்கென ஓர்
குளிர்சாதன பெட்டி
வந்து இறங்கியுள்ளது !

கலைகள் ஓங்கி
கண்ணாடியில் உறங்கி
ஆளுறக்கம் இந்த
கலைவாசி!


0 comments:

Post a Comment