Friday 17 December, 2010

வசந்த காலம்


கண்ணீர் மழையானால்
உன் குடையில்
தொடர்ந்து நடந்திருந்தேன் !
சிரிப்பு பேரலையாய்
பொங்கி எழுகையில்
கரையில் நின்று
கால் நினைத்தேன் !

வாழ்க்கை தடங்கல்
வந்து வந்து
கொன்றும்
இந்த மரணம்
பயத்துடன் நெருங்க
நிழலில்  நீ
இருக்கிறாய்
நண்பனே!

பருவம் மாற மாற
தோற்றம் மாறத்தான்
செய்யும்
நட்பு அதில் சிக்காத
ரகசியம் யாருடன்
நின்று பதில் சொல்லும் !

இரு நண்பர்களின்
இதயத்தில் ஆதிகாலமாய்
பூத்தும்
இன்றும் வாசனை
மாறா பன்னீர் பூ
நட்பு!

தியாகத்தின் தீபம்
உன் ஆனந்தத்தின்
வெளிச்சத்தில் வெளி வருகையில்
என்னை நீ எரித்தாலும்
உன் சுடர் காக்க
இரு கைகள் மறைவாக
நிற்கும் நிமிடங்கள்

என்னுடைய வாழ்
வசந்த காலம்!

Monday 13 December, 2010

காதல் கடிதம்


யார் கூற்றிலும்
என் மனம் கலைந்து
போகவில்லை
தெளிவாக இருக்கிறேன்
முடிவாக இருக்கிறேன்
விரைந்து நடக்கிறேன்
கையில் இரு பூக்கள்
ஒன்று எருக்கம் பூ
மற்றொன்று மல்லி பூ
எதை எடுத்தாலும்
காதலனாய் வரவேற்று
நிற்பேன்
மறுத்துவிடு விரும்பிவிடு
பூக்கள் சொல்லட்டும்
வாய் திறந்து பேசிவிடாதே
என் காதல் மௌன மொழியிலே
பிறக்கட்டும் அல்ல சாகட்டும் !
பசிக்கு முன்னும் பின்னும்

இரைப்பின் நடுவிலும்
ஒரு குவளை தண்ணீராக
நண்பனொருவன்
முளைத்துவிட்டான் !

நாசி வரை வந்து இறங்கி
உயிர் நாடியில் அறிச்சமிட்டு
என் தாயாய் தொப்புள்கொடி
உறவிட்டு
இன்றும் வாழ வைப்பான் !

தாகத்தை தீர்த்து
அக்னிகுன்டத்தை மெல்ல மெல்ல
நிரப்பிவிட்டு,

உடல் குளிரின் சுகத்தை
அடையும் முன்
சிறுநீரக ஓட்டை வழி
தெறித்து ஓடும்
ரகசிய உளவாளி
மண்ணை தேடும்
குடிநீர் விருந்தாளி !

Sunday 12 December, 2010

தொட்டாசினுங்கி

ஒரு முறை தொட்டாய்
சிறு உடல்
வளைந்து நின்றேன்
மறு முறை தொடுவாய்
என்றே
நிமிர்ந்து எழுந்தேன்

கைகள் எல்லாம்
தொடுவானமாய் அதீக தூரம்
நடையாடினால்

மீள்  சுகத்தில்  மரணம்
வென்று விட்டது

கையில் வந்து விட்டேன்
உயிர் ஒடிந்த தொட்டாசினுங்கி !

Saturday 11 December, 2010

ஓவிய வாசல்

நீர் அருந்தும்


பால் பறவை

தேவதையால் முகம்

வெட்கத்தில் சிவப்பு

ஒரு நடைவண்டியின்

சக்கர சுவடுகள்

வென்மேகத்தின் பறந்து

விறிந்த பயணம்

பாதை விளக்கும்

பச்சை மர விளக்குகள்

அடிக்கிய மூங்கில்

வீடுகள்

தண்ணீர் அருந்தும் மாடு

குளத்தில் கல் எரியும்

குட்டி பையன்

இப்படி நீண்ட வருசையில்

காத்திருக்கும் கற்பனை

கால் வலி வாங்க

மூச்சிவிட்ட இடம்

ஓவிய வாசல்  !

Thursday 9 December, 2010

தீயில் கருகும் நூல்போல்

உறுத்தும் விழிகள்

பதட்ட துடிதுடிப்புடன்

இதயம் வெளிவாங்கும்

காற்று !



சுவடுகள் நிறைந்த

மஞ்சள் வானம்

கண்ணிமையில் தெறிக்கும்

ஓசைகளின் விடியல் !



கபட தபட தத்தளித்து எழும்

முன்பனிகால சூடு

எழ முடியாமல் இருளில்

தூங்கும் சூரியன்



இப்படி எல்லாம்

சுற்றி வளைத்து கொன்றது

பொற்கால காதல் அரசு !

Wednesday 8 December, 2010

விடுகதை

மௌனம் கலைத்து


நீண்ட நாட்களுக்கு பிறகு

அவனுடன் பேசுகிறேன் !



விழிகளில் இருந்து

நீர் இறங்கி

கண்டங்கள் தாண்டி

தரையில் விழுந்து விட்டது !



இன்னும் நீ கலையாத

ஓவியமாய்

என் கண்ணிற்கு மட்டும்

தென்படுகிறாய் !


தரிசு நிலத்தில்

மழையின் தீராத கோபம் ................................

Friday 3 December, 2010

யாரும் என்னை ஏசிவிடாதீர்

என் துறுநாற்றம்

உங்களால் பொறுக்க இயலாது!

நான் குற்றாவாளி என்றால்

ஒப்புதல் வாக்குமூலமிட

நடைகட்டி வந்து நிற்பார்!

புரிந்தும் ஒரு முறை

நான் திட்ட இயலுமா ?

கழிவுக்கு விடை சொல்லும்

மண்ணின் மைந்தர்களே

சுற்று சூழல் கேடிற்கு

அலட்சிய கண்ணோட்டத்தை

விரும்பி தறாமல் இருப்பீரா ?

கண்ணீர் வடியும் குப்பைத்தொட்டி ........................
உதவி என்றதும்

கரம் நீட்டினான்
கடவுள் பிறந்தான்
கண்கள் வணங்கி
நின்றது!

தன்னுடன் இருந்த
ஒன்றை பிறரிடம்
பகிர்ந்து கொண்டான்
விலைமகளாய் திறிகிறான் !

மறைபொருள் வெளிச்சமானது
துறவுகள் துளைந்தது
பசுமை பக்கம் பள்ளியிட்டு
நிம்மதியாய் உறங்கினான்
மரணம் வரவேற்றது!

காற்றுப்பை கிழிந்து
இதயம் வெளி சென்றது
உயிர் ஒளியுற்றது !

மனதீயில் கடவுளாகி
தியாகத்தில் விலைமகளாகி
நிம்மதியின் யாசனத்தில்
நிரந்தர அரசனாய்
மோச்சம் காற்றிடம்
கேட்டு நிற்கிறான்
மனிதாப பிறவி !

Thursday 2 December, 2010

மயானம்


த்தம் போடாதே
அமைதியாய் இருவென்று
பகலில்
யாரிடம் கட்டளை வந்தது !

கூச்சலிட்டு ஓடும்
அளவிற்கு நடுநிசியின்
ரகசியத்தை அளவே இல்லாமல்
தின்று முடித்து
பயத்தை ஏப்பமாய்
கொணரும் கலையை
யாரிடம் கற்றாய் !

நீ உறங்கினால்
ஊர் விழிப்பதும்
ஊர் உறங்கினால்
நீ விழிப்பதும்
எக்காலம் தோற்றுவிக்கும் !

Wednesday 1 December, 2010

செங்காற்று

நிழலின் மறைவில்


கூத்தாடும் சூரியன்

மழையின் கொதிப்பில்

மன்றாடும் தீ!



அழுகையின் சப்தத்தில்

அமைதியாய் வெளிவரும்

புன்னகை

கோழையின் வீரியத்தில்

அவிழ்ந்துவிலும் வீரம் !



தேடலின் தட்கையில்

மிதக்கும் முடிவு

கருணையின் கூட்டில்

பறந்துபோகும் அன்பு !



எழுத்துக்குள் புதையும்

விரிசலான கருத்து

நெற்றியின் உச்சியில்

எரியதுடிக்கும் தெளிவு!



எல்லாம் நிற்க இடமின்றி

சுற்றுலா சென்றால்

காற்றுடன்

சூரிய தாகமாய்

தீயின் கோபமாய்

சிரிப்பின் பேரலையாய்

வீரத்தின் வெளிப்பாடாய்

முடிவில்லா எல்லையாய்

அன்பின் அன்னையுடன்

கருது கேட்க புறப்பட்டுவிட்டால்

முடிந்தால் ஓர் நிமிட

ஆராதனை செய்யுங்கள்

தீயான பீடம் தேவையில்லை

சுவாச அஞ்சலி செலுத்தி !