Saturday 14 September 2013

கோடாங்கி

நாம் மனதளவில் இணைந்தோம்  
பின்பு ஏன் பிரிந்தோம் .
உற்சாகத்தை கேட்டதும் பெற்றது  பார்வை 
கண்ணீருக்கே பொறுக்கவில்லை போலும் 
இதயத்தை நினைத்து கொண்டு 
கரைஏறி அமர்ந்தது  வலியாய் ...

உதறல் ஊந்தி இறுதியில் 
என் செவ்வாயில் வந்து நின்றது 
முனகலான மன்னிப்பு மட்டுமே ..

பிரிவுகள் என்பது நிரந்தரமே 
ஆனால் அது நல்லதொரு
பரிவுகளால் குழி தோண்டி 
புதைக்கப்பட்டன ...

இன்றும் கழிவுகள்  இல்லாத 
மறக்க நினைக்கும் நினைவுகளை 
தேடி பார்க்கிறேன் 

சுகமாகவும் சுமையாகவும் 
பதியம் போட்டது 
நிகழ்வுகளே அன்றி 
நாம் அல்ல !

Thursday 18 October 2012

மாவீரன்
உன் கையை பிடித்து இழுக்க
ஐயிந்து ஆண்டுகள் கடந்தும்
முடியவில்லை
ஆனால்
ஐயிந்து அகவையே முடியவில்லை
உன் புடவையை
பிடித்து இழுக்கிறான்
உன் அக்கா பையன் ....


மச்சக்காரி
ஆச்சர்யம் அடிமையானது
புருவங்களை உயர்த்தி
அதன் காலங்கள்
சேதமுற்று நின்றது ,,,

பல்லாயிரம் கண்கள்
தரிசனம் பெற்றும்
உன் பேரழகை எவனும்
விலைக்கு வாங்க வரவில்லை ....

தூரத்தில் பார்த்தே
ரசித்தனர்
தூரிகை வீசியவன்
புகழ் பெற்ற
ஓவியன் ஆனான்

உன்னை தீயிலிட்டு
எரித்தாலும்
சரித்திரம் பேசும் பேரழகி
நீ தானே ...

தோரண வாயிலில்
தொங்க விட்ட
புன்னகை வரைபடம் ........


Monday 17 September 2012

நன்றி மறவேல்
நான் சோம்பேறியாய்
உறங்கி கொண்டிருப்பேன்
நீயோ  வெள்ளன எழுந்து
பொது தேர்வின்
இறுதி நேர எழுதுகோல் போல்
விரைவாய் ஓடி கொண்டிருப்பாய் ....

பற்பசை எடுத்து குளியல் முடிக்கவே
பாதி நேரம் எனக்குள் முடிந்துவிடும்
நீயோ
என்னை பார்த்து பார்த்து
ரசித்தே பாதி காலத்தை
முடித்து விட்டாய் ..........

ஈன்ற முதல்
ஆயுள் நீங்கும்  வரை
அன்றாடம் என் தேவையை
தேடி பிடித்த தேவதையே
நீ தந்தவை எல்லாம்
என்னுடன் நினைவுகள் அல்ல
வளர்த்து விட்ட கனவுகள் ......

அதுவும் ஆலமரமாய்
வளர்ந்து விட்டது
உன் வியர்வை
அடி வேறாய்
பின்னலுட்டது !

இதோ உன் புகழை
விழுதுகளாய் தோரனமிட்டு
நன்றி மறவாமல்
சிறகடித்து விண்ணை நோக்கி
முயல்கிறது சோம்பேறி
பச்சக்கிளி !Sunday 2 September 2012

கதைகள் பேசுவோம் தோழியே


நீ
கண்ணீரின்றி மன புழுக்கமாய்
அழுது கொண்டு இருக்கிறாய் !
உன்னை நேசித்த கனம் முதல்
நானோ கற்பனை காதலுடன்
வாழ்ந்து கொண்டி இருக்கிறேன் !

பொய்யாய் உன் புன்னகையில்
தண்ணீர் வருவது
என் உள் நெஞ்சத்தில்
தெரிந்தும்
உனக்காகவே மேலும்
நீண்டிடாதோ என்ற
அற்ப சந்தோசத்தில்
மன அலைகலுக்குள்
நீந்தி கொண்டு இருக்கிறேன் !

விதி விட்ட வழி
வீதியில் பிதட்டல்களுடன்
அழையும் விசிர்  அல்ல நான்
உன் உசிர் தன்னை ஏந்தி செல்லும்
காவல்காரன் நான் !
வறட்டு பிடிவாதத்தின்
ரசிகனும் நானே !

இறக்கம் ,கருணை
என்பதில் சிக்க வைக்கும்
பாத்திரம் ஏந்திய
பிச்சைக்காரனாய் நீ நினைத்தால்
உன் சில்லறை சிரிப்பினிலே
என்னை சிறகடித்து
உன் வானம்
தேடி நான்
விரைந்து இருக்கு மாட்டேன் !
இறுதியாய்
நீ இல்லை என்ற போதும்
துவளாமல் என்னை
தூண்டி விடுவது
விழி ஓரத்தில்
சற்று முன்
உதிர்த்து போன
கண்ணீர் சுயம்பு தான் !


Saturday 1 September 2012

நிறம் மாறா பூக்கள்
புன்னகையே உதிர்ந்து
புயலாய் மாற
என் வனமேல்லாம்
இருக்கமாய் உரசி உரசி
அனல் பற்றி
தேகம் வானம்பாடி பறவையாய்
மேல பறந்து
உச்சி கோபுரத்தின்
நிழலென
தலை சாய்த்து விழுகிறது கண்ணீர் ...
சுடு வென்னீரில்
முளைத்து விட்ட கொப்பளமாய்
கனவுகள் உடைக்க
கை இன்றி தவிக்கிறது
இந்த பொம்மை ...
என்றும் நிறம் மாற
திருமணத்தில் நறுமணம்
தேடும் விதவை பூ !!!!!!

Friday 9 December 2011

புகைமூட்டம்


கனவுகள் திறக்கிறாய் தேவதை
பல கதைகுளும் பேசினால் தாரகை
எகிறி குதிக்கிற மீன் குளம்
கல் எரிந்து போன இதய கைகள் !
மான் குட்டி தாவல்
மயில் இறகு வருடல்
குயில் குடில் வெப்பம்
முதல் மழை சப்தம்

சுவை அறிய துடிக்கும் தேன்
பனி படர்ந்த புல் வெளி
சிவந்து திரியும் தாமரை முகம்
சிலிர்த்து நிற்கும் மிதமான சூடு

கொடியில் அரும்பும் மொட்கள்
கொலை செய்யாமல் கற்கும் கருணை
தாயின் தொப்புள்கொடி உறவு
அதிகாலை விடியலின் அழகு

மடியில் படற்கின்ற மேக சாடல்
ரோமங்களில் உறுத்தும் புடைப்பு
சந்திக்க காத்திருக்கும் கண்கள்
தாறுமாறாய் ஓடும் உயிர் மூச்சு

வடித்து வட்டமிடும் புன்னகை
இழுத்து கொண்டாடும் உற்சாகம்
சகட்டு மேனி  திகைப்பு
எதையும் சந்திக்கும் துணிவு

 கற்க துடிக்கும் விடா முயற்சி
களவு  போயும் மறுக்கும்  மரபு
திசைகள் அறியா பறவை
இதய துடிப்பில் ஆடும் பொம்மை

மெழுகாய் உதிரும் கோணம்
பறக்கவே யோசிக்கும் தேகம்
எதையும் மறைக்கும் ஞானம்

தெரிந்தே தவறும்
பிள்ளை மனம்
சுவடுகள் வைக்க காத்து இருந்து
ஐம்புலன்கள் கண்டு எடுத்த
செல்ல குழந்தை “ காதல்”
Wednesday 19 October 2011

நினைவகம்தலையை மெல்லக்கோதி

நாயும் நரியும்

சண்டை பிடித்ததாய்

கதைக்கேட்டு

என் சுட்டி

தனத்தின் அளவை

முகம் நூர்ந்து

வரவேற்று,


நெஞ்சாகூட்டின் சூட்டை

அமிலம் தேய்த்து

பிஞ்சு விரலில்

சொடுக்கு விட்டு

மொட்டை மாடி நிலாவில்

நட்சத்திரத்தை எண்ணிவிட்டு,


கொட்டாவி விட்டு

உறங்கியாதாய்

என் தாய்

வயதானதும் மொழிகிறாள்

என் மழலைக்காலம்..................

Friday 14 October 2011

நாக்கு துருத்தி ..........


நானும் நீயும்

கரைந்து கொண்டு இருக்கிறோம்

எச்சில் வழிய ஒரே பாதையில்
நடந்து கொண்டு இருக்கிறோம்
என்ன செய்ய
எனக்கு நரைத்து உதிர்ந்து விட்டது
உனக்கு துளிர் விட யாரோ
மண்டையை வளித்து விட்டான்
மொட்டை குழந்தையும்
வழுக்கை தாத்தாவும்
ஒற்றை ரூபாய் ஐஸ் கிரீம் தேடி.............

Friday 30 September 2011

ஓட்டம்என் நக கண்ணில்
ஒளியுது செவ்வானம்
ஆண் மரத்தை இழுத்து
விழி தரையில் சாய்த்து
வின்மினிபுளிதி  கொண்டு
சிரிக்கிறதே புன்னகை ..................

உன் வெட்கம்
வெட்ட வெளியை
எட்டி பார்க்க ,

பாத சுவடுகள்
வீடு மறந்து திரிகிறதே இதயப்பை ...........
விடை சொல்லு பால் மழையே
அதிர்ச்சியான இன்பங்கள்
இன்னும் எத்தனை காலங்கள்........