Friday 9 December, 2011

புகைமூட்டம்


கனவுகள் திறக்கிறாய் தேவதை
பல கதைகுளும் பேசினால் தாரகை
எகிறி குதிக்கிற மீன் குளம்
கல் எரிந்து போன இதய கைகள் !
மான் குட்டி தாவல்
மயில் இறகு வருடல்
குயில் குடில் வெப்பம்
முதல் மழை சப்தம்

சுவை அறிய துடிக்கும் தேன்
பனி படர்ந்த புல் வெளி
சிவந்து திரியும் தாமரை முகம்
சிலிர்த்து நிற்கும் மிதமான சூடு

கொடியில் அரும்பும் மொட்கள்
கொலை செய்யாமல் கற்கும் கருணை
தாயின் தொப்புள்கொடி உறவு
அதிகாலை விடியலின் அழகு

மடியில் படற்கின்ற மேக சாடல்
ரோமங்களில் உறுத்தும் புடைப்பு
சந்திக்க காத்திருக்கும் கண்கள்
தாறுமாறாய் ஓடும் உயிர் மூச்சு

வடித்து வட்டமிடும் புன்னகை
இழுத்து கொண்டாடும் உற்சாகம்
சகட்டு மேனி  திகைப்பு
எதையும் சந்திக்கும் துணிவு

 கற்க துடிக்கும் விடா முயற்சி
களவு  போயும் மறுக்கும்  மரபு
திசைகள் அறியா பறவை
இதய துடிப்பில் ஆடும் பொம்மை

மெழுகாய் உதிரும் கோணம்
பறக்கவே யோசிக்கும் தேகம்
எதையும் மறைக்கும் ஞானம்

தெரிந்தே தவறும்
பிள்ளை மனம்
சுவடுகள் வைக்க காத்து இருந்து
ஐம்புலன்கள் கண்டு எடுத்த
செல்ல குழந்தை “ காதல்”








0 comments:

Post a Comment