Saturday, 31 July, 2010

கிராமத்தானின் விலைவாசி


குழந்தை அழுவுது
பால் வாங்கலாம் வா
இல்லை
பால்டாயில் வாங்கலாம் வா!

வயுறு பசிக்குது
சோறுப் போடு
அரிசி வாங்கலாம் வா
இல்லை
வாய்க்கரிசி போடலாம் வா
பக்கத்து தெருவில்
சக தொழிலாளி
பட்டினியால் இறந்து கிடக்குறான் !

வேர்த்து ஒழுவுது
மின்விசிறியை அழுத்து
மின்சாரம் இல்லை
அப்போ அந்த
பினாமி பேருல உலாவும்
மின்சார தங்குகுதடயற்ற கருவியாவது
போடு

திருடி திங்கும் மின்சாரத்த
மீட்டு தர
காவல் நிலையம் போவும்
வண்டி எடு
இல்லை
பெட்ரோல் விலை தெரியாதோ
உனக்கு நடந்துபோ !

நீ எதையும் நாடு
அது தான் திரும்ப
தரமால் திருப்பி அனுப்புவதே
விலைவாசி பண்பாடு !
ஆகையால் அன்றாட
வாழ்க்கை பெரும்பாடு !

Wednesday, 28 July, 2010

தேவதைசற்று தள்ளியே
நின்று இருந்தாலும்
பேருந்து கம்பிகளை
இருக்க பிடித்திருந்தாய் !

தோழிகள் பார்க்காத
நேரத்தில் ஓரக்கண்ணில்
புருவம் உயர்த்தினாய்!

பின்னால் வருகையில்
நடை பழக கற்றுக்குடுத்தாய் !

கண்களை தூண்டிலிட்டு
பொம்மையாய் ஏந்திச்செல்ல
மனதை சிந்தவிட்டாய்!

தலையினை கோதி
மினுக்கட்டாம் பூச்சியைப்போல்
இமைகளை மிதக்க வைத்திட்டாய்!

நுனி நாக்கை முன் நீட்டி
நுறயிரலை
பொங்க வைக்கிறாய் !

உதடுகளை உரசி
காதுகளை கூச்சத்தில்
பணியவைகிறாய்!

வளையல்களை குலுங்க செய்து
சில்லறை காசுகளை
நினைவு படுத்தினாய் !

சப்தமிடும் கொலுசுக்குள்
சத்தமில்லாமல்
சரணடைய வைத்திட்டாய்!கழுத்து வலயத்தின்
பற்கடியில்
எழும்புகளை நொறுக்கிட்டாய்!

காதுவளைய தொங்கலில்
உயிர்தன்னை
தொங்க விடுகிறாய்!

மூச்சு சுவாச
வேகத்தில் ஆசைகளை
கொளுத்திவிடுகிறாய் !

பிறர் நெருங்கும் கூச்சத்தில்
தொட்டா சினுங்கியாய்
சுருங்கி விடுகிறாய்!

அனைத்திருக்கும் புத்தகத்தில்
ஆண்பிள்ளைகளை
புதைத்து விடுகிறாய் !

விதைத்து இருக்கும்
மார்பின் சூதில்
பிறர் எச்சில் வழியவே
விழிகளை விலைக்கு
வாங்கினாயோ!

நூறு கொடியால்
தோன்றட்டும்
தேவதை நீயே
அழகின் பிள்ளையாய்
என்றும் தவழட்டும் !


Friday, 23 July, 2010

மதுச்சாடல்


சிறு பிள்ளை பிறந்தான்
ஊசி உடைந்து
காற்று கிழிந்து
கற்றையுயிர்
அழுது விசும்பியும்
சுவாசங்களை சூநியகாரியின்
மடியில் நீற்குடத்தில்
அடக்கி
மரணதேவதைக்கு
பரிசளிக்குறான் !
எச்சம் கரைபுரண்டு
விளைச்சாடிய
தீரா ஏக்கத்தில்
நிதப்ச நிலை
மயக்கம் இந்த
மதுச்சாடல்!

ஆத்மக்கூறுகள்உறங்கா கிராமத்தில்
நடந்து கொண்டு
இருக்கும் ஓர் ஆத்மா
நிறங்களற்ற
தீராத ஆசா பாசத்தை
தின்ன முயல்கின்றன !
முட்டு சந்தை நெருங்கியவுடன்
தெருநாயின் விழியில்
அகப்பட்டு
அது உண்ணும்  மாமிச
தோள்களில் உள்ள கசிவுகளை
நோக்க செய்தது!
குருதிகுடிக்கும்  நாயின்
கோபத்தில் ஆளாகி
தாடையில் மோதி
மூச்சுவாங்க ஆற்றங்கரையில்
வந்து விழுந்து  மோதின!
சலசலக்கும் மீன்களின்
கரைசலை கேட்டு
காது வலிக்க
சுடுகாட்டின் ஓர் கூட்டில்
மீண்டும்
தஞ்சம் புகுந்தது !
அன்று எரிகையில்
வெளியே சென்ற
அதே கூட்டின்
ஆத்ம அலைகள்
ஒன்றுக்கு ஒன்று
முட்டி கொண்டது!
நடுநிசியில் சமாதானம்
செய்ய மழையொன்று
குறுக்கிட்டது!   
நயத்துடன் பேசி பழகி
பழயனவும் புதியனவும்
ஒப்பந்தமிட்டது
இன்று  எறிந்த போன
விறகு கட்டையில்
என் ஆசைகளை நீ
தீமூட்டு
உன் ஆசைகளை நான்
மூடுகிறேன் !
காலையில் கனத்துடன்
எறிந்த இரு ஆத்மாக்கள்
ஒரு பானையில்
தண்ணீரில் கலந்து
சிறகு முளைத்த
பறவைகளாய்
தீர்க்கமான முடிவுகளாய்
பறக்க தொடங்கின !

ஓர் உயிரின்
எண்ணங்கள் எங்கிருந்து
வந்ததோ அங்கேயே
அன்பவள் அள்ளிக்கொள்கிறாள்!
சுவடுகள் எங்கு முளைத்ததோ
அங்கேயே முடிவுகள்
பதிந்து விடுகின்றன
ஆத்ம வழிகள்
அதனுடன் கூறுகளாய்
குலைக்கப்படுவது மண்ணின்
குணமோ !
                    
முனகல்நாணலாய் வளைந்து
சருகை விரட்டுகிறேன்     
காற்று என் தோனியில்
பயணம் செய்ய
கட்டளை இடுகிறேன்
கூட்டமாய் சிதறி கிடந்த
சருகின் ஒரு பகுதி
என்னை விட்டு அகலமருப்பதால்
வேரின் முச்சுக்காற்று
விரட்ட தான் செய்கிறது
வெப்பத்தின் திசையில்
அழிந்து போன
கிழியா நினைவுகளே
இந்த முனகல்கள் !


Thursday, 22 July, 2010

வெட்டப்படும் கோடரிஅனல் பறக்கும் 
காற்றுக்குள் 
அலையடித்து ஒதுங்கிய 
ஓர் தட்கை
என் தனிமை!


கைகளின் தூரத்தில்  
கைரேகை தேடும் 
வாழ்வு 
நாளுக்கு நாள் 
புரம்கையை உதிர்க்கும் 
பட்டமரம் 
என் நகர்வு!


வெளிர்கொண்டு உதிக்கும் 
காலைநேர ஆதிபகவன் 
சற்று தளிர்மேனியில் 
பட்டதாய் அவ்வப்போது 
ஓர் நிகழ்வு !


குளிர்காலத்தின் உறைபனியாய் 
நுனினாக்கின் ஈர்ப்பில் 
ருசியோடிய பசிமுற்று 
என் அனுபவம் !


கைதவறி விழுதெழுந்த 
கோடரியாய்
குதித்து எழும்பும் 
ஆற்றலின் ஓசை 
என் இளமை !


கைப்பையில் பொருளின்றி 
தொங்கி விழும் 
காற்றழுத்த விசையாய்
ஓர் இதயத்தின் 
இறுதி துடிப்பு 
மரணம்!ஈழப்பிரதேசம்

கருணையுள்ள இதயங்களே   
என் கண்களை உற்று பாருங்கள்
நெருப்பை கக்கிக்கொண்டு
பறக்கும் பறவைகள்
உலா போகின்றன!

அயர்ந்து போன வான்வெளியில்
வெளிச்ச அழகை
தேடி திரிகின்ற
பார்வை
கருமேகத்தின் வளைவில்
சுற்றி வளைந்துள்ளது!

இனங்கள் உங்களை
பிடித்த பேயாய்
வதைத்து கொண்டுள்ளது!

என் தேவதைகள்
உங்களின் இதயங்களை
கடிக்க புறப்பட்டு
விட்டார்கள் !

ஓர் பனித்துளிக்கு ஏங்கும்
மரக்கிளையாய்
என் வயுறு
பசிக்கு தவித்து
நாட்கள் நீண்டுள்ளது !

சீமானுக்கு சொந்தமான
பணங்கள்
எம்மை துரத்தி அடிக்கவே
படைஎடுத்தனவோ!

அவதார மனிதர்கள்
அன்பை விளைவிக்க
மறந்தே
எம்குடியை அகற்ற
தீக்கு பசியென்று
இறை
குடுக்கின்றனவே!

இறையன்பு இன்றைய
உலகில்
அன்பில்லாமல் எங்கிருந்து
மலரவைக்க

யார் கோடேறி எடுத்து
எமற்கு குழியிடுகிறார்
கண்டுகொள்ளுங்கள்
இந்தத் எழைபிரதேசத்தையும் ................................

Wednesday, 21 July, 2010

தொப்புள்கொடி

விருச்சமுற்ற மரத்தின்
அடியில்
இன்று பூக்க காத்துருக்கும்
புது விதமான
ஆழ வேர்கள்
கிளி ஒன்று
தின்று போட்ட அத்தி பழ
விருச்ச வருடலில்
மண் வாசம் துவண்டு
நலின பட்டதாம் !
எங்கிருந்தோ பறந்து
வந்த
காக்கையின் எச்சம்
அள்ளி தெறித்த
சிதறலில்
பூத்து குழுங்க
பூ வைத்ததாம்
அத்திமரம்!
புதைந்தோடிய வேர்
விட்டு செல்ல மனமின்றி
பின்னிஎடுத்த
தாயின் தாம்பு
கயுறு தான்
இந்த
தொப்புள்க்கொடி உறவு !
கழிவு பாத்திரம்

ஆவலாய் இறுக்கத்தின்
கதிரை உறக்கதுடன்
கட்டி தழுவினேன்
கடந்து சென்ற
நினைவலைகள்
காலையில் அறிவில்
வரவில்லை
நிறுத்தி யோசித்தேன்
அது என்னை      
பயமுறுத்தவும் இல்லை
சந்தோச படுத்தவமில்லை
நிழலுக்கு எது
நிர்ணயமிட முடியும்
நேற்றுடன் இருந்த
தேடல்
இன்று கானல் நீராய்
இன்றுடன் இருக்கும்
முனுகள் கிளரப்பட்ட
சருகாய்
வாடை மண்ணில்
இருந்து
உணரவே
என்னில் இருந்து விழுந்த
ஒரு துளி வியர்வை
வெற்றியின் காலில்
சிக்கி கொள்ளாமல்
சிக்கிய மீன்முள்ளுக்கு
பிணைந்து எடுத்த
ஒரு பிடி
சோற்று உருண்டை!
தெளிவான செவ்வானம்
பலமான தூசியுடன் 
காற்றில் ஆடும்
நூல் கண்டு
இந்த உயிர் !

Tuesday, 20 July, 2010

நாணத்தின் நிழற்ப்படம்

எதையும்
எளிதாய் உரைத்திடும்
உன் மெலினம்
வெட்கப்பட்டு ஓர்
புள்ளியில் உரையும்
கூச்சலிட்ட மௌனம்
வியர்வையாய்
அள்ளி தெளிக்கும் !

நாணத்தில் எத்தனை
ரகசியம்
அதன் கண்களுக்கும்
நாதத்தின் மொழி
உதடுகள் அறிந்திடவே
சிரிப்பை விநியோகம்
செய்தது!

தெளிந்த தண்ணீரே
உப்பு கரைசெலே
இதுவே
உள்நெஞ்சின் உண்மையான
வெட்டவெலியோ
கரடு முரடாய்
இருந்த கருப்பு வெள்ளை
உணர்வுகள்
அந்தரங்கமாய் விழித்த
பொழுதுகளே
இந்த சொர்கவாசலோ !

குதற்றமாய் அஞ்சி
கேட்டும்
கூறுகெட்ட சிதைவுகள்
மனமகிழ மறுக்கிறதே!

தேடலின் பசி
அமுதை உண்டும்
காற்று பையை
இதயம் சுருக்கியும்
நீட்டியும்
உயிரிடம் பிச்சை
எடுக்க தான்
செய்கிறதே!

நாணம் நிழற்ப்படமெடுத்து
ஓசையின்றி
ஓயாத அலைகளாய்
உருவெடுத்தனவே!


பிள்ளையே எங்கு இருக்குறாய்

ஓர் நீல்வட்டில்
வட்டமிடும்       
எச்சம் தீரா
பறவையின் உலகம்
சற்று நிதானமாய்
கருவிழியில் குகயினை
அடைகொண்டு
கருவுக்கு உயிர்குடுக்கவே
பிற தீர்க்கத்தின்
ஏனைய சிறார்களை
கண்டுகொள்ளாமல் நீர்
அருந்துது!

கல்லொன்று விழுந்து
கனவுகளை சிதைத்தாலும்
மூக்கின் கூறில்
முயன்றதை நிரப்பிவிட்டு
ஓட்டமிடும் !

வீடு வந்து
கூட்டினை மரக்கிளையில்
பார்த்தால்
அதே கல்லொன்று
கனவை கலைத்துடுமாம் !

கல்லில் ஈரமுண்டு
கனவில் பறவைக்கு
சற்று தூரமாய் நின்றும்
பரந்தும் பாதிக்கபடுவது
மறுக்கபடுவது

பருந்துக்கு தெரியுமோ
என்னோவோ
பார்த்தவுடன்
கல் எரியும்
வேடர்களை கொத்த தான்
செய்கிறது!


Monday, 19 July, 2010

எதிரும் புதிருமாய்

மழையே
நீ நீராடு
என் கூந்தலின் அழகை
கலைக்காமல்
புரண்டோடு!

நதியே
நீ திரும்பி போ
நான் பறிக்கும்
கொடுக்காற்ப்புள்ளி
உன்மீது படர்ந்துள்ளது!

விரலே
என்னை  தொடாதே
காதுகளவாணி உதறலில்
சத்தமிடுவான் வலியை!

காற்றே
நீ நெருங்காதே
வேகமாய்
சூடு நெருப்பில்
இணைகிறது சுவாசமாய்!

தேடலே நின்று போ
உன் நிழல் எதிரி
மறதி
மரணத்தை நெருங்குகிறான் !

பார்வையே குலைந்துபோ
உன் கோடுகளை
குறைத்திட
இருள் படையெடுக்கிறான்!

எ கடலே
உள்வாங்கு
பல உயிர்கள் உன்மடியில்
தவல காத்து
கிடக்கின்றன
கரை தாண்டி
உயிர் எடுக்காதே!