Thursday 22 July, 2010

வெட்டப்படும் கோடரி



அனல் பறக்கும் 
காற்றுக்குள் 
அலையடித்து ஒதுங்கிய 
ஓர் தட்கை
என் தனிமை!


கைகளின் தூரத்தில்  
கைரேகை தேடும் 
வாழ்வு 
நாளுக்கு நாள் 
புரம்கையை உதிர்க்கும் 
பட்டமரம் 
என் நகர்வு!


வெளிர்கொண்டு உதிக்கும் 
காலைநேர ஆதிபகவன் 
சற்று தளிர்மேனியில் 
பட்டதாய் அவ்வப்போது 
ஓர் நிகழ்வு !


குளிர்காலத்தின் உறைபனியாய் 
நுனினாக்கின் ஈர்ப்பில் 
ருசியோடிய பசிமுற்று 
என் அனுபவம் !


கைதவறி விழுதெழுந்த 
கோடரியாய்
குதித்து எழும்பும் 
ஆற்றலின் ஓசை 
என் இளமை !


கைப்பையில் பொருளின்றி 
தொங்கி விழும் 
காற்றழுத்த விசையாய்
ஓர் இதயத்தின் 
இறுதி துடிப்பு 
மரணம்!



0 comments:

Post a Comment