என் கண்களை உற்று பாருங்கள் 
நெருப்பை கக்கிக்கொண்டு 
பறக்கும் பறவைகள் 
உலா போகின்றன!
அயர்ந்து போன வான்வெளியில் 
வெளிச்ச அழகை 
தேடி திரிகின்ற
பார்வை 
கருமேகத்தின் வளைவில் 
சுற்றி வளைந்துள்ளது!
இனங்கள் உங்களை 
பிடித்த பேயாய் 
வதைத்து கொண்டுள்ளது!
என் தேவதைகள் 
உங்களின் இதயங்களை 
கடிக்க புறப்பட்டு 
விட்டார்கள் !
ஓர் பனித்துளிக்கு ஏங்கும்
மரக்கிளையாய்
என் வயுறு 
பசிக்கு தவித்து 
நாட்கள் நீண்டுள்ளது !
சீமானுக்கு சொந்தமான
பணங்கள் 
எம்மை துரத்தி அடிக்கவே 
படைஎடுத்தனவோ!
அவதார மனிதர்கள் 
அன்பை விளைவிக்க 
மறந்தே 
எம்குடியை அகற்ற
தீக்கு பசியென்று 
இறை 
குடுக்கின்றனவே!
இறையன்பு இன்றைய 
உலகில் 
அன்பில்லாமல் எங்கிருந்து 
மலரவைக்க 
யார் கோடேறி எடுத்து 
எமற்கு குழியிடுகிறார் 
கண்டுகொள்ளுங்கள் 
இந்தத் எழைபிரதேசத்தையும் ................................

0 comments:
Post a Comment