குழந்தை அழுவுது
பால் வாங்கலாம் வா 
இல்லை 
பால்டாயில் வாங்கலாம் வா!
வயுறு பசிக்குது 
சோறுப் போடு 
அரிசி வாங்கலாம் வா 
இல்லை 
வாய்க்கரிசி போடலாம் வா 
பக்கத்து தெருவில் 
சக தொழிலாளி 
பட்டினியால் இறந்து கிடக்குறான் !
வேர்த்து ஒழுவுது 
மின்விசிறியை அழுத்து 
மின்சாரம் இல்லை 
அப்போ அந்த 
பினாமி பேருல உலாவும் 
மின்சார தங்குகுதடயற்ற கருவியாவது 
போடு
திருடி திங்கும் மின்சாரத்த 
மீட்டு தர 
காவல் நிலையம் போவும் 
வண்டி எடு 
இல்லை 
பெட்ரோல் விலை தெரியாதோ 
உனக்கு நடந்துபோ !
நீ எதையும் நாடு 
அது தான் திரும்ப 
தரமால் திருப்பி அனுப்புவதே 
விலைவாசி பண்பாடு !
ஆகையால் அன்றாட 
வாழ்க்கை பெரும்பாடு !

0 comments:
Post a Comment