Monday, 2 August 2010

சீரமைப்பு



இதய
காற்றாடி சுழன்று
கண்ணாடி அகண்டு
விரல்கள் உரைந்து
வயதிகம் ஊந்து
தொலைதூரம் நடக்க
ஓர் பாதை!

மயக்க நிலையில்
நீர்வேண்டி
நாவு வரண்டி
திறக்க முடியா
வார்த்தை பெட்டி
ஓர் நகர்வு!

உல்லாச கோவிலில்
கருவறை தாண்டி
நாடகமேடையில்
உயிர் நாடி கூடத்தில்
ஓர் நடனம் !

நான் யூகித்த கனவுகள்
பழங்காலமாய்
ஒருவனின் கல்லறையில்
புதையுண்ட
ஓர் வாசகம் !

மறைவதும் பெறுவதும்
ஓர் வரம்
தருகின்ற நிகழ்கால
தோப்புகள் எந்தன்
உறவுகள்!

விளச்சிவிட்ட விதை
நீர்சுரக்க எழுந்து
நின்றதாய் புரிந்துணர்வு
அம்மா !

காலமே நீ
என்னை சகட்டு மேனிக்கு
திட்டி தீர்த்துவிட்டாய்
பிழை என்ற அகராதியில்
என் பக்கம்
திரும்பிய மயமெல்லாம்
சோகக்கோலம் !

கலைத்து மறுநாள்
தண்ணீர் விட
இரு கைகளை
காற்றினில் தேடுகிறேன்!

மாயை திரட்டி
மனிதம் விரட்டி
கூச்சலிட்டு அழுததாய்
ஓர் ஞாபகம்!

விலைகுடுக்க அன்பவள்
தாரமாய் அவதரித்தாள்!
மீளேன்ற கண்ணாடி
பிரதிபலித்த
ஓர் வருடம்
ஊஞ்சல வழி
நின்ற உயிர்
மரக்கிளை முறிந்து
படுதோல்வி மூண்டது!

மழலைகள் மழம் கழித்தால்
தோன்றும் நாற்றம்
கூற்றாய் வீசியது !

கிறுக்கிய வண்ணப்படம்
உயிரின்  தேடலில்
அங்கும் இங்கும்
அலைந்து
புதுவீட்டின் சுவற்றில்
அலங்கரிக்க கரையேறியது!

கொன்று குவிக்கும்
உணர்வுகள் வலிகளை
அடிமைகளாக்கி
அன்று புத்துயிர் இட்ட
மழலையின் புது பெயரே
இந்த சீரமைப்பு!







0 comments:

Post a Comment