Wednesday 28 July, 2010

தேவதை



சற்று தள்ளியே
நின்று இருந்தாலும்
பேருந்து கம்பிகளை
இருக்க பிடித்திருந்தாய் !

தோழிகள் பார்க்காத
நேரத்தில் ஓரக்கண்ணில்
புருவம் உயர்த்தினாய்!

பின்னால் வருகையில்
நடை பழக கற்றுக்குடுத்தாய் !

கண்களை தூண்டிலிட்டு
பொம்மையாய் ஏந்திச்செல்ல
மனதை சிந்தவிட்டாய்!

தலையினை கோதி
மினுக்கட்டாம் பூச்சியைப்போல்
இமைகளை மிதக்க வைத்திட்டாய்!

நுனி நாக்கை முன் நீட்டி
நுறயிரலை
பொங்க வைக்கிறாய் !

உதடுகளை உரசி
காதுகளை கூச்சத்தில்
பணியவைகிறாய்!

வளையல்களை குலுங்க செய்து
சில்லறை காசுகளை
நினைவு படுத்தினாய் !

சப்தமிடும் கொலுசுக்குள்
சத்தமில்லாமல்
சரணடைய வைத்திட்டாய்!



கழுத்து வலயத்தின்
பற்கடியில்
எழும்புகளை நொறுக்கிட்டாய்!

காதுவளைய தொங்கலில்
உயிர்தன்னை
தொங்க விடுகிறாய்!

மூச்சு சுவாச
வேகத்தில் ஆசைகளை
கொளுத்திவிடுகிறாய் !

பிறர் நெருங்கும் கூச்சத்தில்
தொட்டா சினுங்கியாய்
சுருங்கி விடுகிறாய்!

அனைத்திருக்கும் புத்தகத்தில்
ஆண்பிள்ளைகளை
புதைத்து விடுகிறாய் !

விதைத்து இருக்கும்
மார்பின் சூதில்
பிறர் எச்சில் வழியவே
விழிகளை விலைக்கு
வாங்கினாயோ!

நூறு கொடியால்
தோன்றட்டும்
தேவதை நீயே
அழகின் பிள்ளையாய்
என்றும் தவழட்டும் !










1 comments:

அ.முத்து பிரகாஷ் said...

வளவன் ...அவள் எனக்குள்ளும் மிதக்கிறாள் உங்கள் வரிகளினூடே!

Post a Comment