Friday 23 July, 2010

ஆத்மக்கூறுகள்



உறங்கா கிராமத்தில்
நடந்து கொண்டு
இருக்கும் ஓர் ஆத்மா
நிறங்களற்ற
தீராத ஆசா பாசத்தை
தின்ன முயல்கின்றன !
முட்டு சந்தை நெருங்கியவுடன்
தெருநாயின் விழியில்
அகப்பட்டு
அது உண்ணும்  மாமிச
தோள்களில் உள்ள கசிவுகளை
நோக்க செய்தது!
குருதிகுடிக்கும்  நாயின்
கோபத்தில் ஆளாகி
தாடையில் மோதி
மூச்சுவாங்க ஆற்றங்கரையில்
வந்து விழுந்து  மோதின!
சலசலக்கும் மீன்களின்
கரைசலை கேட்டு
காது வலிக்க
சுடுகாட்டின் ஓர் கூட்டில்
மீண்டும்
தஞ்சம் புகுந்தது !
அன்று எரிகையில்
வெளியே சென்ற
அதே கூட்டின்
ஆத்ம அலைகள்
ஒன்றுக்கு ஒன்று
முட்டி கொண்டது!
நடுநிசியில் சமாதானம்
செய்ய மழையொன்று
குறுக்கிட்டது!   
நயத்துடன் பேசி பழகி
பழயனவும் புதியனவும்
ஒப்பந்தமிட்டது
இன்று  எறிந்த போன
விறகு கட்டையில்
என் ஆசைகளை நீ
தீமூட்டு
உன் ஆசைகளை நான்
மூடுகிறேன் !
காலையில் கனத்துடன்
எறிந்த இரு ஆத்மாக்கள்
ஒரு பானையில்
தண்ணீரில் கலந்து
சிறகு முளைத்த
பறவைகளாய்
தீர்க்கமான முடிவுகளாய்
பறக்க தொடங்கின !

ஓர் உயிரின்
எண்ணங்கள் எங்கிருந்து
வந்ததோ அங்கேயே
அன்பவள் அள்ளிக்கொள்கிறாள்!
சுவடுகள் எங்கு முளைத்ததோ
அங்கேயே முடிவுகள்
பதிந்து விடுகின்றன
ஆத்ம வழிகள்
அதனுடன் கூறுகளாய்
குலைக்கப்படுவது மண்ணின்
குணமோ !
                    








0 comments:

Post a Comment