Monday, 19 July 2010

எதிரும் புதிருமாய்

மழையே
நீ நீராடு
என் கூந்தலின் அழகை
கலைக்காமல்
புரண்டோடு!

நதியே
நீ திரும்பி போ
நான் பறிக்கும்
கொடுக்காற்ப்புள்ளி
உன்மீது படர்ந்துள்ளது!

விரலே
என்னை  தொடாதே
காதுகளவாணி உதறலில்
சத்தமிடுவான் வலியை!

காற்றே
நீ நெருங்காதே
வேகமாய்
சூடு நெருப்பில்
இணைகிறது சுவாசமாய்!

தேடலே நின்று போ
உன் நிழல் எதிரி
மறதி
மரணத்தை நெருங்குகிறான் !

பார்வையே குலைந்துபோ
உன் கோடுகளை
குறைத்திட
இருள் படையெடுக்கிறான்!

எ கடலே
உள்வாங்கு
பல உயிர்கள் உன்மடியில்
தவல காத்து
கிடக்கின்றன
கரை தாண்டி
உயிர் எடுக்காதே!

     





0 comments:

Post a Comment