Wednesday, 21 July 2010

கழிவு பாத்திரம்

ஆவலாய் இறுக்கத்தின்
கதிரை உறக்கதுடன்
கட்டி தழுவினேன்
கடந்து சென்ற
நினைவலைகள்
காலையில் அறிவில்
வரவில்லை
நிறுத்தி யோசித்தேன்
அது என்னை      
பயமுறுத்தவும் இல்லை
சந்தோச படுத்தவமில்லை
நிழலுக்கு எது
நிர்ணயமிட முடியும்
நேற்றுடன் இருந்த
தேடல்
இன்று கானல் நீராய்
இன்றுடன் இருக்கும்
முனுகள் கிளரப்பட்ட
சருகாய்
வாடை மண்ணில்
இருந்து
உணரவே
என்னில் இருந்து விழுந்த
ஒரு துளி வியர்வை
வெற்றியின் காலில்
சிக்கி கொள்ளாமல்
சிக்கிய மீன்முள்ளுக்கு
பிணைந்து எடுத்த
ஒரு பிடி
சோற்று உருண்டை!
தெளிவான செவ்வானம்
பலமான தூசியுடன் 
காற்றில் ஆடும்
நூல் கண்டு
இந்த உயிர் !









0 comments:

Post a Comment