Thursday 12 August, 2010

மரகத சிதறல்


அறுத்தெடுக்கும் மண்ணரிப்பின்
வாசம் வெளிவந்து
தூசிகளை தள்ளி
மூக்கின் நுனியில்
நாற்றத்துடன் படலம்
வாழ்க்கை !

கூறுவிட்ட அருவாமனை
பளிரென்று மின்னுவதாய்
வெளிச்சம் கக்கி
கண்கள் ஏற்ற இறக்க
சூசகத்தேடல் உலகம்!

நிலமே நீ வரண்டு விட்டாயோ
அறநெறியை காக்கும்
உடலின் அறிப்பை
தொடங்கிவிட்டாயோ!

பாதகத்தின் விளைச்சலுக்கு
துணை போராயோ!
கோடரி எடுக்கும்
கைகளை அடக்கி ஆள
நீ சுரண்டல் பேர்வளிகளை
அரசாட்சியில் அமர்த்தி
அழகு பார்க்கிறாயோ!

தீர்வு சொல் பூமரமே

விடிந்து முடியும்
விடியலிடும் வினவும்
தீர்க்கம் மாறா
பிள்ளை மனம்
கொட்டி சுரக்கும்
நீதி பால் எல்லாம்

கள்ளி வழி
கண்களுக்கு தொடுத்து
உதிரமாய் உதிரவிட்டாயோ !

தென்றல் வீசும் உன்
செவ்வான தோப்பில்
நான் காத்து நிற்பது
நல்லதொரு
தேவதுணை வேண்டியே !


0 comments:

Post a Comment