ஏதோ ஒன்று
நினைவில் நின்று
காலத்தை ஒவ்வகப்படுத்தி
சந்திப்பின் இடையில்
ஏக்கத்தை
உபயம் செய்து
முற்றுப்பெறும்!
அப்பொழுதுகளில்
அலமாரியில் உறங்கிய
புத்தக குவியலை
திறம்பட புறட்ட
என்னை
வழி நடத்தி சென்றிட
கைகளுக்கும் மூளைக்கும்
புத்துயிர் குடுத்துவிடு
ஆறாம் அறிவே!
எனக்கும் ஏழாம் அறிவு
இல்லயன்ற நாட்களை
அது கிழித்து போடும்!
புதுவன கழித்து
பழயன சிதைத்து
ஆக்கத்தை சிந்திப்போகும்
அந்த மழைத்தூறல்!
பயணத்தின் வருடலை
எனத்தாக முன்முயலும்
தீஞ்சுவை உண்டு
பல்சுவை கண்டு
விருப்பும் வெறுப்பும்
மாறி மாறி கதையின்
சுருக்கத்தில் நிலை இதுவே
என்றுரைக்கும் !
ருசியும் குதுகளித்து
கானலின் விளிம்பில்
நடன மாடிய திசைகளை
அதுவும் வசைப்பாடும்!
நீண்டிருந்த
பதட்டத்தை துண்டாக்கி
ஊக்கத்தை உருவாக்கி
தூக்கத்தை பெற்றெடுக்கும் !
ஏ இரவே
மின்னொளியின் அலசலை
கண்டெடுக்க கனவுகளில்
நரம்புகளை புணர்த்தி
தசைகளை உயர்த்தி
நள்ளிரவில் பாலமிடு !
தூக்கமின்மை அறிவுக்கு
போதுமானதே
சுற்றி வரும் பூமியில்
சுழென்று எடுக்கும்
தேகத்தை
புதுசுகமிட்டு வரவேற்பாயா !
0 comments:
Post a Comment