இரு குழந்தைகள் 
கட்டிலிலே 
நிர்வாண குளியல் 
தொடங்கயிலே 
அன்பை அளவில்லாமல் 
எடுத்து 
ஓர் உயிராய் இணைத்து 
பூமாலை ஒன்றை தொடுத்தார் 
அரைமணியோ ஒருமணியோ
நேரம் அங்கே 
அடிமையாக்கப்பட்டது
புது புது வாசத்துடன் 
மூக்கும் மர்மத்தை 
நீண்டு கொண்டு இருந்தது 
உடல் வானில் காயப்போட்ட 
துணியாய் 
ஈரம் உலர்ந்து 
சூட்டை கைப்பற்றியது!
தொடுத்த மாலை உதிர 
வழி பிறந்ததால் 
கார்மேக கைகளும் 
கிளியோவிய கால்களும் 
பிரிந்து செல்கின்றன!
அங்கே வயதான 
கிழவன் நின்று
வாழ்ந்து சொல்கிறான் 
மோகம் முப்பது நாள் 
சொல்லியவன் ஒரு சோம்பேறியென்று!

0 comments:
Post a Comment