Thursday 26 August, 2010

கீதாஞ்சலி


யாரையும் நாங்கள்
ஏசிப்பார்க்க நினைக்கவில்லை
வறுமையின் பிடரியில்
தலையினை தைப்பது
வசதியானவனின் கைத்தொழில்!

காது குடுத்து
கேட்கும் பொருட்டு
இசைக்கும் பாடல்
நல்இதயங்களுக்கு கீதாஞ்சலி!

உழைக்கவே நினைத்து
அல்லும் பகலுமாய்
சாலைகளின் ஓரத்தில்
தெருமுனை கூட்டமிட்டு
குயில்கலாய் கூவிக்கிடக்கிறோம்!

எங்கிருந்தோ வந்த
சிறுமை படைத்த
காகம் எச்சமிட்டு
போனாலும்

உறக்க பாடும் குரலுக்கு
தெரியும்
நாம் பிச்சையெடுக்கவில்லை!

பிழைப்புடன் வாழும்
எழைகளாயினும் இறக்கத்துடன்
வருவோருக்கு தெரியும்
கீதாஞ்சலியின் கம்பீரம்
ருசிப்பார்க்கும் குரல் வளம் !


0 comments:

Post a Comment