Sunday, 9 January 2011
நத்தை
அர்த்த சாம நிசிகளின்
கடினத்தை உனக்காகவே
இமை பொழுதில் தாங்கி நிற்கிறேன் ..........
இருளுக்கு முரண் வைக்கும்
விடுகதையை சூரியனின் வாசலில்
கடலின் சீற்றமான காலைப்பொழுதுடன்
இணைத்து விட்டாய் ...................
விழிகளின் துவாரத்தில்
ஒற்றை கண்ணினால்
கனவுகளை சுமந்துகொண்டு
உலகை எட்டி பார்க்கிறேன் ....................
யாரோ ஒரு தேவதை
என்னை பிரிந்து
வருத்ததுடன் விடை பெறுகிறாள் ............
சுபத்துடன் பூபாளம் பாடும்
பறவைகள் மரங்களில் இருந்து
மலைகளில் நகர
துள்ளி குதித்து ஓடும்
ஆட்டு குட்டியின் மணியோசை
காதோரமாய் கீறலில்
சிந்தி விழுந்திருந்தது ...................
வயதான பாட்டியின்
கம்பிளி போர்வை
இன்றும் கரை திரும்பும்
அலை என உள்வாங்கியது ................
ஒரு தேனீர் கிடைக்குமா
என்ற பதட்டத்துடன்
உதடுகள் உணர்ச்சியின்று
மரத்தை ஒட்டியிருந்தது ..............
எனக்குள் அப்படியொரு
அசதியை பெற்றதில்லை
இந்த சோம்பேறி பட்டம் ............
இருந்தும் இதை மீறி
அம்மாவின் கூக்குரலுக்கு அப்பால்
நகர்கிறது
இன்றைய வாழ்க்கை நத்தை.................
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நத்தை கவி வித்தை..... பாராட்டுக்கள்...
வாழ்க்கை விடியும்!
kavithai arumai. vaalththukkal,
Post a Comment