Wednesday 30 June, 2010

காலமுள்


காலமுள்

என் தூக்கத்தின் எதிரி
நாபாக மணி எழுப்பினான்,

காலை கதிரின்
மின்னொளி
அதனை மறக்க அடிக்கும்
வானொலி !

கையிலே சூடான
இன்றைய நாளிதழ் !


ஒரு கூக்குரலில்
கொண்டு வரும்
கிழத்தியின் தேனீர் !

ஒய்யாரமாய் நடையில்
கழுத்தை தாவி கொள்ளும்
செல்ல குழந்தை !

உற்சாக குளியல்
முதல்
நண்பரின் பேருந்து
சந்திப்பு வரை
அன்பு படையல் !


அழுவலக குளறுபடியில்
முட்டி கொள்ளும்
ஒரு நாள் சண்டை !

அரட்டை களபரம்
அடி வரை
கொண்டு செல்லும்
ஆனந்த சிரிப்பு !


மாலை நேரத்து
பேருந்து கூட்டம்!
வீடு பற்றிய
ஒரு
கைபேசி உரையாடல் !


வரும் தெருவில்
எதிர் எதிர்
வீட்டார் சண்டை !

தெரு நாய்களின்
மிரட்சி ஊட்டும்
கொந்தளிப்பு !

பூ மரங்களின்
மெல்லி இதமான
வருடும் காற்று!

வீடு வந்ததும்
கிழத்தியின் உற்சாக
வரவேற்பு !

குழந்தை
பள்ளி விட்டு
வராமல் இருக்கும்
பரிதவிப்பு !


பள்ளி பேருந்தின்
ரீங்கார ஒலியில்
ஒளீந்து கொள்ளும்
எதிர்பார்ப்பு!


ஆவலுடன் முட்டி
விளையாடும்
சுட்டி விளையாட்டு !

மனைவியின் இன்றைய
அழுவலக விசாரிப்பு !

தொலை காட்சியில்
தொலைந்து போகும்
என் தேடல் !

மீண்டும் உற்சாக படுத்தும்
சிரிபொலி நகை !


இடையில் துரத்தி வரும்
பின்னளுடும் பசி !
சூடி தட்டில் விழும்
தோசை
கூடவே நாக்கை பதம்
பார்க்கும்
கெட்டி சட்னி !

உணவை ஓரம் கட்டும்
கைபேசி !
அதில் உறைய வைக்கும்
அதிர்ச்சி செய்தி !

மன அமைதிக்காக
நெஞ்சை நின்டவைக்கும்
புத்தக புழுக்கள் !


சப்தம் இல்லா இரவில்
கணினியின் காற்றுடன்
திருவிழா கோலமாகும்
இதமான ராகங்கள் !


படுக்கை அறையில்
இதமான சூட்டின்
பால் குடியல் !

மடி சாயிந்த
மனைவியின்
தாய் நினைவு !

குழந்தையின் இரவு
முத்தம்
அது நாபக படுத்தும்
வருங்கால சேகரிப்புகள் !

இறுதியாய் கிழத்தியின்
இரவு வணக்கம் !
மீண்டும்
என் தூக்கத்தின் எதிரி
என் அருகில்
அதிகாலை வரை
சுழன்று கொண்டு
என்னை சுழல
முயழ்கிறான்!















0 comments:

Post a Comment