Monday 5 July, 2010

கண்களின் கரைசல்


கண்களுக்குள் நெருப்பை
விழிகளின் துவாரத்தில்

அள்ளிக்கொண்டு
உன் ஈரபுன்னகை
மெல்லிய விரிசல்களை
கண்ணீருக்கு காணிக்கை
தருகின்றன!


மீளமுடியா வருத்தம்
அதில்
விண்மீன் கூட்டின்
நடுவில்
 என் இருளை தாங்கி
நிற்கின்றன!


வளர்ந்து வரும்
பிறைநிலவு
அதன் பின்நின்று
வாழ்த்து மடல் எழுத்தித்தான்
போய் இருந்தது!


உன் ஒளியின் காலம்
என்னை நெருங்கியும்
இதயம் நெருப்பை
விழுங்கியே நின்றது !


சிறு சிறு முனகல்களில்
வெளிர்விடும்
என் செவ்வானம்
உன் இதயபூமியின்
பக்கம் திரும்ப திரும்ப
கண்களே ஓய்வேடு!
என்றாலும் எடுபதில்லை!


தேடல் விருந்து குடுத்தும்
கண்களில் பசி
புரை ஓடியும் புலம்புகிறது
வேடங்கள் மட்டும்
உலகின் உச்சம் வரை
கண்ணீர் தூண்டிலில்
துள்ளி ஓடுது......................................

0 comments:

Post a Comment