Thursday 8 July, 2010

தேடல்

கடல் தாண்டி  
மலை தாண்டி
ஓர் பயணம்,
அதில்  
வதண்டு வாடும்
 இந்த மாறாத
மனிதம்!


கூக்குரலுக்கு
செவி சாய்க்க  
ஆளில்லை
தொலைபேசியில்
உரையாடியும்
மனதில்   
ஓர் பதட்டம்
போகவில்லை!

கோடி கோடியாய்
கொட்டி குடுத்தும்
பயனில்லை,
இல்லை என்ற
வார்த்தையே
இந்த ஊரின்
அகராதியில்
முதல் பகுதியோ!

என் கிராமத்தில்

எழில் கொஞ்சும்
மழலையின் சிரிப்பும்
இளம் பெண்களின்
கிண்டல் பேச்சுக்களும்,
பெரியோரின் ஆசிகளும்
நதிகளின் ஒற்றை பாலமும்
திண்ணை உறக்கத்தையும்
வயல் வெளிகளும்
ஆட்டு கூட்டின்
ஆனந்த சங்கிலி
மணியையும்,
மாட்டு சத்தத்தையும்
கோழியின் கூவலும்,
கிளியின் கீச்சுக்குரலையும்
அருவியின் அலசலையும்,

பறை பாடும் கீறலையும்
அறுசுவை விருந்தையும்
ஆடுவெட்டி படையலும்
கோயில் திருவிழாவும்
நீந்தி பழகிய ஆறும் ,
இன்று
எங்கு சென்று தேடுவேன்.........

என் நகரத்தில்
அரட்டை அடிக்கும்
நண்பர்களும்,
அறிவு பசிக்கு
சோறு ஊட்டும்
நூலகங்களும்,
வயறு குலுங்க
சிரிக்க வைக்கும்
உற்சாக மேடைகளும்,
மனம் விட்டு
பேசி மகிழ்ந்த
மதுபான கடைகளும் ,
எதிர் வீட்டாரை
வம்பி இழுக்கும்
வாய் கொழுப்பு
சாக்கயியையும்
எங்கு சென்று தேடுவேன் ................

ஆதலால்,

உயிரின் அணுக்கள்
வளர்ந்ததை
வெளி வந்தால்
தெரிந்துவிடும்!
அதுப்போல்
நான் ஊர் சென்றால்
ஆசையின் கிளர்ச்சி
வென்று விடும்!

நம்பிக்கையோடு
இந்த நரகத்தின்
வாசலில்
அழுவலக ஊழியனாக
நான்...........








0 comments:

Post a Comment