Friday 9 July, 2010

பிறந்த நாள் பரிசு


நண்பனே உன்னை
சந்திக்கவே
நான் வெகுதூரம்
நடந்து வந்தேன்
நீ நிலவை பார்க்க
சென்று விட்டதால்
வீட்டில் இல்லை!

குறிகிப்போன உன் இதயத்தை
குறுக்கு வழியில் உடைக்கவே
குறும் செய்தியை
கைபேசியில் வினவினேன்!
பதில் வேண்டி
நீண்ட இடைவெளியில்
உன் அழைப்பு
என்னை சோளக்கொள்ளை
பொம்மையாய் நிறுத்தியது!

உன் பிறந்த நாளில்
என் நினைவு பரிசு
என்ன விடயம்
ஏன் அவதி
என்றல்லவா சிறைபடுத்தினாய்!
சிறகுகள் முளைத்த
உன் தோழனை
சிறும சொற்களால்
இலக்க நேரிட்டாய் !
என் ஆத்ம
கூறுகள் இங்கிருந்து
வாழ்த்துகளை தெளித்து கொண்டு
தான் இருந்தது!
தெளிவாய் விடை பெற
முயல்கிறேன்
கைகளின் நடுக்கம் இன்னும்
குறையவில்லை
பார்த்து பார்த்து வாங்கிய
பரிசு பொருளின்
தாகம் முடியவில்லை !
பழக்கத்தின் புழுக்கத்தை
உணர்த்திய
உன் நிலவுக்கும்
ஈர நெஞ்சின் நிழலுக்கும்
கற்பின் மேலான
நட்பின் நன்றி....................................



0 comments:

Post a Comment