சூழல் சட்டைகளை
உறித்துவிடும் சந்தர்ப்பவாதி
சர்ப்பங்கள் நாம் தான்
இது பழக்கமாய் போனதால்
நெருங்கும்
நன் தீமை கீரிகளின்
பற்களுக்கு பயந்து
உள்ளூரும் மாணிக்க கற்களை
ஒளித்தே நகர்கிறோம் ..........
அவ்வப்போது காணாமல் போய்
திரும்பும் கானல் நீர்
இதய பையின்
மைய பொருளானதால்
நம்பிக்கை ஒளியில்
எண்ணங்கள்
சடை முடிக்கிறது .......
இது தேவை என்றும்
இல்லை என்றும்
உள்ளார நடைபோடும் சுவாச
காற்றுக்கு மட்டும் தெரியும் போல
இதயம் விரிந்தால்
மென்மையின் அருகில்
பள்ளி கொள்கிறது
இதயம் அகண்டால்
வன்மையின் சுவட்டில்
கால் பதிக்கிறது .......
அது தெரிந்தும்
ஆசைகளை உண்ணும்
காகித உடல்
வெளிர்ந்த சோலியாய்
பவள முத்துக்களான
சுற்றத்துடன்
கரை சேர்கிறது
இயற்கையின் நீதியில்
பறந்து திரியும்
ஆயிரம் முடி விரிசல்களில்
ஈரமான சிலவும்
உலர்ந்த பலவும்
வெடித்து வெளிவந்த
இதயக்கூடு சிம்மாசனத்தின்
அரசன் வெற்றியாளன் .............
0 comments:
Post a Comment