Wednesday 7 July, 2010

கதை சொல்லும் நேரம் இது

சிதைந்து போன 
உறவு ஒன்று 
கண்ணில்  ஏக்கத்துடன் 
பையில்  பணமின்றி 
வயிற்றில்  சுவசகாற்றை 
மட்டும்  சுவாசித்து 
கொண்டு  தான் 
இருந்தது !
தெருவில் 
எத்தனையோ கண்களும் 
அதனை  உற்று  பார்க்க 
கூட   நேரமின்றி 
சீவ பசிக்காக 
உழைப்பு என்ற 
போர்வையை 
உரக்க  போர்த்தி  தான் 
உறங்கியது !
இன்னும்  எத்தனை 
மணியோ 
அல்ல 
எத்தனை நொடியோ 
உருவத்தின்  உணர்ச்சிகள் 
மெல்ல  மெல்ல 
மாலை  நேர 
ஆதி கதிரவனை  போல் 
மறையத்தான் தோன்றியது !
மனதை  குழந்தையாய்
வைத்துகொள் 
யாரோ  குச்சளிட்டு 
சொன்ன  ஞாபகம்!
எதிர்  வீட்டில் 
வசிக்கும் 
மீனாட்சி 
அகவை  எட்டு !
தான்  பள்ளிக்கு 
கொண்டு  செல்லும் 
உணவை 
உருவத்தின்  அருகில் 
வைத்து  விட்டு
கடந்து  தான் 
சென்று  இருந்தால் !
மிதமான 
மாலை  நேரதில் 
உருவடின்  வாசிப்புக்கு  முன் 
அளவில்லா  ஓர்   கூட்டம்!
குழந்தையும் அழுகையுமாய்
ஓடி  வந்தால் !
கூட்டத்தின் நெருசலில் 
தன் முகத்தை நுழைக்கும் 
நிழையில் 
கண்ணீர் மேல் இருந்து  தான் 
சென்றிருந்தது !
உருவத்தின் உற்சாக 
கொட்டங்குச்சி  இசையே 
கண்டு 
தெருவே  உற்சாக 
துள்ளலின்  நினைந்தது !
அன்று   முதல்  அவன் 
பசி  என்ற  சொல்லே 
பார்க்காத 
தெரு  வாசிகளின் 
இசை  தோழன் !


0 comments:

Post a Comment