Tuesday 6 July, 2010

பிறை மாறா நிலா

நேற்று இதே
கருவேலம் காட்டில்
கைக்களை பிடித்து
உறவாடிய நிலா
இன்று பவுர்ணமி
உடை இட்டாய் !
பால் சோறு ஊட்ட
கைகள் உண்டு
காதலன் எங்கே!

கத்தாளம் காட்டில்
கசிந்த ரத்தத்தின்
ஈரம் காயக்கூட
நேரமில்லை !

மீள முடியா
சோகத்தில்
ஊர் திரும்புகிறாள்!
வளையல் இல்லா
கலைவாணி
கிராமத்தின் கிழடுகளுக்கு
எப்போதும்
வாய் அசைப்போடும்
தீனியாய்!

படித்து  பட்டம் வாங்கிய
இளைஞன் கூட
வார்த்தைகள் கொண்டு
முட்டி எறிகிறான்
இந்த கூழாங்கல்லை!


ஆறுதல் என்று
மழலைகளை  அல்ல
நினைத்தாலும்
அதன் தாய்
விட்டுவைப்பதில்லை !

சமுகம் சற்று
நிறம் மாறத்தான்
செய்தது
கையில் ஒரு
தெருநாய் வெறியுடன்
இவள் அரவனைப்பானதும்!








0 comments:

Post a Comment