Sunday 18 July, 2010

அகம் புறம்

நான் உன்னை நோக்கி 
நடந்து கொண்டு
இருக்கிறேன் ..

நீயும் நானும் 
பயணம் செய்ய 
வெகு தூரம் உள்ளது ..

உலகம் அதற்குள்
விழித்து கொண்டது!

யாருமற்ற பனி
பிரதேசத்தின்
மலை உச்சியில்
உன் வரவு
எனக்கு புதுமையாய்
இருக்க பிராத்தனை
கொண்டு இருக்குறேன்!

சற்றுமுன்
தகவல் வந்து சேர்ந்தது
இன்னும் பத்து
நிமிடங்களில் அல்லது
ஏனோரு நாழிகையில்

கண்முன்
கனவுகளை பரித்துடுவாய்!

சலனங்களை சந்தன
முத்தத்தில் நீக்கிடுவாய்!

விரல்கள் உன்
அரவணைபிற்காக
விரிய தொடங்கி
விட்டன!

நொடிகள் இதயத்துடன்
போர்களத்தில்
குதித்து இத்துடன்
மூன்று நிமிடங்கள்
முடிந்து விட்டன!  

சொர்கத்தின் வாசலை
நீயாவது திறந்து விடு!

மலையில்
கற்களை ஒவ்வொன்றாய்
எண்ணியும் பார்த்தேன்
அதில் ஓர் கல்லின்
கூர்மை
உன் கண்ணின்
வகை
சட்டென்று கையை
கிழித்து தான்
போயிருந்தது !

குருதி வழிந்தது
அதில் வரும்
வாசம்
சற்று வித்தியாசமாய்
தலையினை சுற்றத்தான்
செய்தது!

இலைகள் கொண்டு
சுத்தம் செய்கிறேன்
முடியவில்லை

அப்பொழுதே
உணர தொடங்கிவிட்டேன்
உன் வருகை
மீண்டும் மீண்டும்
என்னுள் எழுந்து
கொண்டுயிருந்தததை!

வலி மறக்க
நல்ல காதல் பாடல்களை
உதடுகள் முணுமுணுத்தது!
பசியின் வரவு
பாடலுக்கு வயிற்றின்
காவலாய் ஆனது!

புல்லில் விளையாடிய
கால்களும்
தத்தி தத்தி
ஒய்ந்தது!

எங்கே இருக்கிறாய்
இன்னும் வரவில்லையே
அசறிகள் ஆழமாய்
கேட்டு கொண்டுயிருந்தது!

அது உன் குரலோ
இல்லை காற்றின்
வீச்சலோ!

நிதானமாய் கண்டு
கொள்கிறேன்
நீ துன்பத்தின்
அடியில் சிக்கிய
விசும்பலே அது!

கூர்மையாய் அறிகிறேன்
நீ வரும்முன்
தோழன் மழை
வருகிறான்
நல்ல சகுனம்

பாறைகள் பற்களை
கடிக்க
தொடங்கிவிட்டன!
உடலின் எழும்புகள்
இடிதாங்கியாய் நிற்கின்றன!
சிக்கிய
நானும் நீயும்
இதில் இணைந்து தான்
போயிருந்தோம் !

மரணம் என்னை
வரவேற்கும் முன்
நான் அவன்
வீடு சென்றேன்!
















0 comments:

Post a Comment