மனிதன் பேசுகிறான்
இதய வீட்டுக்குள்,
அந்த மனைகளின்
வாசல்
அல்லும் பகலும்
வெளியில் தெரிவதில்லை...........
புழுகத்தின் தோற்றம்
இவன் கையை கடிக்கும் நேரம்
இயற்கையுடன் மருந்து போட மறந்ததில்லை ......................
கடற்கரை,ஆற்றங்கரை ,
பூங்கா, நகையாடல் ,குளம்,குட்டை,மதில் சுவர்,
இப்படி இயற்கை உடைகள் சூடி கொள்கிறான்
ஆயினும் இயற்கைக்குள் காழ்புணர்ச்சி
இருந்துவிட்டால்...........
இவனின் தொடர்பியல்
எங்கிருந்து துண்டிக்கப்படும் ..............
பிறப்பு
உயிர் குடுக்கும்
மரபணு
உத்வேகமாய் ஊந்திய
ஆசுவாச காற்று ....
வளர்ப்பு
வளர்ந்துவிட்டேன்
தளிரின் செருக்கு
வளரவைத்தேன்
தண்ணீரின் கம்பீரம்
காத்தல்
மரத்தில் கூடுவைத்தேன்
பறவையின் பறைசாடல்
பறவைக்கு இடம் தந்தேன்
மரத்தின் மறுமொழி
அழித்தல்
ஒடிந்து விட்டேன்
சூட்டின் ஆற்றல்
ஒளிந்து கொண்டேன்
நீரின் வல்லமை
இயற்கையாய் பிறந்து
இயற்கையாய் வளைந்து
இயற்கையால் ஒடிந்து
விழும் பட்டு போன
தாவர மனிதம் ....................
3 comments:
அருமையான சிந்தனை ... நல்ல கவி வரிகள் ...
நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...
கவிதை அருமை.வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனை... கவிதையும் சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...
http://www.philosophyprabhakaran.blogspot.com/
Post a Comment