என்னை
ஏளனம் செய்யும் கோடரி
எதுவாக இருக்க முடியும் .......................
நீ வெட்ட வெட்ட
நககண்ணில் துளிர் விட்டு எரிகிறது
கூறான
நெருப்பு ஆயுதம் ..............
நகையுண்ட கண்களை
குத்திகிழித்திட மெல்ல நகர்கிறேன்
நீராவியாய் வேகத்துடன்
சொகுசு வண்டியில்
வீதியுலா செல்கிறாய் ............
மீண்டும் ஒரு ஏளன பார்வை
மனம் தளராமல்
இன்றளவும்
பசியின் பக்கத்தில்
வயதின் தளவட்டில்
ஒரு சில்லறை கூடல் கூடும்
இனிய கோயில்வாசலில்
பிச்சைகாரன் ...........................................
3 comments:
எல்லாப் பிச்சைக்கரர்களுக்கும் இது பொருந்தாது... உழைத்து சாப்பிட வழி இருந்தும் பிச்சை எடுக்கும் ஈனப்பிறவிகள் இன்னும் இருக்கின்றனர்...
அன்பு நண்பரே ,
இன்றளவும்
பசியின் பக்கத்தில்
வயதின் தளவட்டில்
இந்த வரிகளை கூர்ந்து கவனிக்கவும் .............
இதுவே எனது கவிதையின் தெளிவு வயதான இயலாத முதியோர்களை குறிகொண்டு எழுதப்பட்டவை
இவர்களின் நல்வாழ்வுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் நண்பா ? வெறும் கவிதை மட்டும் தான் இயற்ற போகிறோமா ?
Post a Comment