Monday 18 April, 2011

வா வா வெண்மதியே


நீ உம் என்ற
வினாடிகளில் விடை தேடிய
பறவை தான்
இன்று இளப்பார
தோள்களில் துள்ளி விளையாடி
கொண்டு இருக்கிறது !

நீ இல்லை என்று
சிணுங்கிய கண் அசைவின்
மறு கணங்கள் தான்
ஆகாயத்தின் ஒரு துளியை
எதிர்நோக்கும் சுபிச்சம்  
என்கிறது இந்த
வெட்கப்பட்ட பொன் சிரிப்பு...........

பொய் என்றாலும்
மெய் என்றாலும்
எனக்கே தெரியாமல்
என்னுள் வார்தைக்களாய்
முளைத்து உதிர்ந்து விட்டாய்
நினைவுக்கு மணிகட்ட
உன் நிழலிலே மிதந்து
அரியணை தேடி
பால் ஒளியின்
சன்னல்  ஓர வேடிக்கையாளன்
வெண்மதியே ...

மறைமுகமாய் கனவுகள்
இன்று உன்னுடன் நின்று இருக்கும்
அந்த முனுகளில் ஆயிரம் ஆசைகள்
சின்ன சிறு குழந்தையாய் பிறந்து இருக்கும்
முடிந்தால் நெஞ்சிலே வைத்துகொள்
யாரிடமும் சொல்லாத
கனவு காதல்
ஒரு தலை இரவில்
தலையணை பிரிவிகளுடன்................

1 comments:

Post a Comment