Friday 9 July, 2010

தாய் பூமி

  
கடல்  கடந்து
கரை  கடந்து
ஓர்  விண்மீன்  
கவிதை  பழகுது!

அதன்  உறவுகள்  
பின்னில்  இருந்து
மை  தடவுது!
காலம்  சதை
மூங்கிலில்  
ஆட்டம்  போடுது!

ராகம்  அன்பில்  
கலைந்தோடுது!
கேட்கும் நெஞ்சம்
வளைந்தோடுது!

 பிழை  என்று  
வந்தப்போதும்   
பின்னளுடும்  மனம்
வைகறையில்
வானம் பாடியாயி
இரவின் விட்டிலை
தொலை தூரத்தில்
பார்த்து தான் ஏங்குது.

பூவரச பட்டையின்
வாசமாய்
எங்கிருந்தோ வந்த
இருகுயில்கள்
இதனை தற்காலிகமாய்
மறக்கடிகவே உதவுது!

இங்கு கோடையும்
அங்கு  குளிரும்
மாறி மாறியே பரவ
பாசத்தின் மணிகள்
உட்புற கோயிலில்
நீண்ட காலமாய்
ஒலித்தே உளவுது!

உயிரின் கயுறு
இமைகளில்
விழுந்த முடிச்சை
அவிழ்த்திடுமா
கனவுகளுக்கு ஓர்
நல்வழி சொல்லிடுமா

யாரிடம் கேட்டால்
தெரியும்
அன்பால் திரியும்  
அந்த தேவதயால்
தாய் பூமியே
அறிவாள்!









1 comments:

சௌந்தர் said...

கவிதை அருமை

Post a Comment