Tuesday 20 July, 2010

நாணத்தின் நிழற்ப்படம்

எதையும்
எளிதாய் உரைத்திடும்
உன் மெலினம்
வெட்கப்பட்டு ஓர்
புள்ளியில் உரையும்
கூச்சலிட்ட மௌனம்
வியர்வையாய்
அள்ளி தெளிக்கும் !

நாணத்தில் எத்தனை
ரகசியம்
அதன் கண்களுக்கும்
நாதத்தின் மொழி
உதடுகள் அறிந்திடவே
சிரிப்பை விநியோகம்
செய்தது!

தெளிந்த தண்ணீரே
உப்பு கரைசெலே
இதுவே
உள்நெஞ்சின் உண்மையான
வெட்டவெலியோ
கரடு முரடாய்
இருந்த கருப்பு வெள்ளை
உணர்வுகள்
அந்தரங்கமாய் விழித்த
பொழுதுகளே
இந்த சொர்கவாசலோ !

குதற்றமாய் அஞ்சி
கேட்டும்
கூறுகெட்ட சிதைவுகள்
மனமகிழ மறுக்கிறதே!

தேடலின் பசி
அமுதை உண்டும்
காற்று பையை
இதயம் சுருக்கியும்
நீட்டியும்
உயிரிடம் பிச்சை
எடுக்க தான்
செய்கிறதே!

நாணம் நிழற்ப்படமெடுத்து
ஓசையின்றி
ஓயாத அலைகளாய்
உருவெடுத்தனவே!






1 comments:

சௌந்தர் said...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

Post a Comment