பொங்கி எழும்
பெருங்கடலே
நீ கடந்து வந்த
சுவடுகளை
என் காதில் செல்லமாக
உரைப்பாயா ?
உன் உச்சியை
தொட்டு பார்க்க
எனக்கும் ஆவலே
இருந்தும் என்னை
மூழ்கடிப்பதிலே
எந்த சுகத்தை
கண்டுவிட்டாய்!
உன் பாதத்தில்
முத்தமிட்டு
என் முகாதரத்தை
துளைத்துவிட்டு
கோடானகோடி சிறுப்பிள்ளைகளில்
ஒருவனாய் திகழ்வதில்
எனக்கும் ஆவலே
நீ
நீலமாய் நிற்கையில்
நீளம் கொண்ட
கண்களுக்கும்
சோகம் தாக்காமல்
அழுகையை
சோதித்து பார்க்கும்
தோழன் நீயன்றோ...............
கரையில் இருந்தால்
அள்ளிக்கொள்கிறாய்
மீறி
உள்ளே வந்தால்
உலா வந்து
தள்ளிவிடுகிறாய்
உன் விடுகதையின்
விடை என்ன
யார் உனது
உறவாளி
விஞ்ஞானம் காண
முடியா
நெஞ்சுயிர் பாட்டி..........................
4 comments:
அருமை.......
நன்றி .
வளவன்
கவிதை சிறப்பு...
உங்கள் பின்னோட்டம்
மேலும் எழுத உதவும்
நன்றி
வளவன்
Post a Comment