Tuesday, 1 March 2011

பயணம்

கண்ணில் தென்படும்
இளம் வஞ்சியர் கூடும்
இடமெல்லாம்
நாற்காலியிட்டு அமர்கிறது
கொல்லி கண் பிசாசு ....

நான் பருவத்துடன்
படகில் ஏறிவிட்டேன் போல
இன்றைய பொழுதுகள்
இக்கரையும் அக்கறையும்

 சுகத்தை அள்ளி கொண்டு
செவ்வானமாய் மிதந்து
பூமழையாய் தூவி விழுகிறது ....

விடிந்து எழுந்ததில் இருந்து
இளமையின் ததும்பல்கள்
இங்கே ஏராளம்
உண்மை தான் ...

சிறு புன்னகையால் கொன்று வைத்தால்
ஒருவள்

அருகில் நெருங்க நெருங்க
என் அழகின் கர்வத்தை
தன் சட்டைப்பையில் மடித்து வைத்து
சென்றால் ஒருவள்

உறக்க முன்மொழிந்து
அச்சம் அவிழ்த்து
மௌனத்தை
கட்டுடைத்தால் ஒருவள்

விலாசம் இன்றி
திருவிழா குழந்தை ஆனதும்
காற்றில் பேசி செய்கையில்
திசைகாட்டி பலகையாய்
மற்றொருவள் ...


பேருந்தின் இருக்கையில்
பின் அமர்ந்து கொண்டு
முன் அமர்ந்த என்னை
தோடிக்கு ஆடும் பாம்பாய்
தலை திரும்ப செய்யும்
ஒருவள் ....

பேருந்து கூட்டத்தின்
நடுவில்
பயண சீட்டின் பண்டை மாற்று
முறையில்
சீட்டு எடுக்கும்
பச்சைக்கிளியாய் மற்றொருவள்...

பாதசரிகளின் நடைப்பாதையில்
இடதும் வலதும்
நகர வைத்து
கண்டிடாத பூகம்பத்தை
உள்ளுக்குள் உளிக்கிவிட்டு
செல்லும் ஒருவள்

மொட்டை மாடியின்
முகம் பார்க்கும் கண்ணாடியில்
போலி முகத்தை தேடி

கை தவறி விழுந்த
வலய கோடுப் போல்
புருவத்தை உயர்த்தி
சிலிர்துகொண்டவள் மற்றொருவள் .

 வழி தோறும
ஆயிரம் முகங்கள்
அழிந்து விடுகின்றன

வாரம் தோறும
கனவுகளின் முகங்களும்
பிறந்து மரிக்கின்றன !

தேடல் கொண்ட உலகில்
தேடலுடன் அடங்கிய
என் பயணம்
என்னவளை தேடி
பிரகாசமான முனுமுனுப்புகளுடன்....
























Monday, 28 February 2011

அறை கண்ணாடி





அறைமுழுக்க மௌனம் லயித்து

உரையாடல் ஒலிகளை
மெல்ல மெல்ல
தேடி திரியும் உதடுகள் ....

துவண்டு இருக்கும்
இதய விரிசல்களால்
காற்றில்லா பிரதேசமான
உதட்டின் உச்சி
கவிழ்ந்து மணக்கிறது
கண்ணீர் உப்புகரிசல்களாய் .....

கசப்பான வாசத்தின் தோற்றம்
பின்பம் மாறிவிட
ஊர்
கண்ணாடியின் இலைகள்
தேய தொடங்கும் முன்
நிழல் உருவில் மருவி
வடிகிறது நடுக்கத்தின்
பால்குடி குழந்தை ..............


எதிர்வரும் காலம்
தூளியில் தாலாட்ட
நம்பிக்கையில் விழுந்து
நிற்சப்தம் மறைத்து
நிம்மதியான கனவுகளுடன்
உறக்கத்தில் பறக்கிறது
வெள்ளி வான் கானக்குயில்..



























Wednesday, 9 February 2011

மனப்பெட்டி




 பாதத்தின் சுவடுகள்
இங்கே ஏராளம்
இரவுகளும் பகலும்
இதனுள் தேய்ந்து
கொண்டே  இருக்கின்றன ...


எல்லோரின் கனவிலும்
இந்த நடை வண்டி
உருண்டோடி இருக்கும்
அது வாங்கிய பரிசு பொருள்
நினைவு கோப்பை என்றால்
கண்ணீரும் சிரிப்பும்
மாறி மாறிப் சிந்தி இருக்கும்


அதனை தாங்கி பிடிக்கும்
கைகள் நிலையான உறவுகள்
என்று ஆழ்மன
ஊர் குருவி நிலையிடும் ..


உலகத்தின் நியதியில்
வெத்து கோப்பை
இன்னொரு நடைபாதையில்
பயணிக்க முயலும்..........


காலத்தின் கடையில்
மீண்டும் அடகு வைத்து
மூலையில் ஒதுங்கி
மரண வாசல் ஈட்டதும்
மற்றொரு உயிர் உதிரும்
கோபுர வாசலில் கோப்பையை
வென்று எடுத்திட...................

Saturday, 22 January 2011

பிறந்த நாள் வாழ்த்து




காலத்தின் கையேட்டில்
உனக்கான வயது ஓர் ஆண்டு
கூட்டி எழுதப்பட்டுவிட்டது
அதற்கான கொண்டாட்டம்
இன்றைய பிறந்த நாள் விழா...............

வானத்தின் தேவதையால்
மலர் கொண்டு வந்துவிட்டால்
தாய் பூமியின் உறவுகள்
கைகொண்டு வாழ்த்து மாலை
தொடுக்கிறார் ..............

இன்முகமும் பன்முகமும்
சூரிய முகத்தில்
நிலா வண்ணமிடட்டும்
உன் பளீர் சிரிப்பில்
பாருலகின் ஏதொரு இடத்தில்


நீங்கி விட்ட சுகமான சுமையை
நிழலென பின் தொடர்ந்து
வழித்துணையாய்
வாழ்த்தி மகிழ்கிறேன் ..............








 














Friday, 21 January 2011

பிறை கோடுகள்




வெட்கத்தை விட்டு
வேட்டியில் முகம் மறைத்து
திருமேனியின் சுவாசம்
துறுனாற்றதை ஆட்கொள்கயில்
சட்டப்பையின்  அகர பாதாளத்தில்
நாளைக்கான அர்த்தம் தேடும்
அம்மா ..............

கண்கள் வழியில்
பிழைகள் மிதந்து
கானலை ஒளிகற்றையாய் அள்ளி வீசும்
திருத்தம் மாறா அப்பா ...................

எதிர்த்து விழைந்தால் விடையின் மடியில்
மிதக்கும் மாய அலைகள்
நீரின் சுவையுடன் கை கோர்த்து இணைகையில்

ஆசைகளின் அண்மை கால சுவடுகள்
மீண்டும் தோன்றிய இடம்
எங்கள் வீடு.............

செவ்வானம் தளிர் கொண்டு எழுகையில்
கருவாச்சியின் மின்னல் தெறிப்பில்
கோபம் நெற்றி பொட்டில் தொடங்கி
மூளை விழி பிதுங்கி
மறுமுனையின் வெளிச்சம் காணும்
போதை அரசன்
என் குடிகார அப்பன் .........................

Thursday, 13 January 2011

பிச்சைக்காரன்


உன் கண்களை விட
என்னை
ஏளனம் செய்யும் கோடரி
எதுவாக இருக்க முடியும் .......................


நீ வெட்ட வெட்ட
நககண்ணில் துளிர் விட்டு எரிகிறது
கூறான
நெருப்பு ஆயுதம் ..............

நகையுண்ட கண்களை
குத்திகிழித்திட மெல்ல நகர்கிறேன்
நீராவியாய் வேகத்துடன்
சொகுசு வண்டியில்
வீதியுலா செல்கிறாய் ............

மீண்டும் ஒரு ஏளன பார்வை
மனம் தளராமல்
இன்றளவும்
பசியின் பக்கத்தில்
வயதின் தளவட்டில்
ஒரு சில்லறை கூடல் கூடும்
இனிய கோயில்வாசலில்
பிச்சைகாரன் ...........................................

Wednesday, 12 January 2011

தாவரம்

மனிதன் பேசுகிறான்

இதய வீட்டுக்குள்,
அந்த மனைகளின்
வாசல்
அல்லும் பகலும்
வெளியில் தெரிவதில்லை...........


புழுகத்தின் தோற்றம்
இவன் கையை கடிக்கும் நேரம்
இயற்கையுடன் மருந்து போட மறந்ததில்லை ......................


கடற்கரை,ஆற்றங்கரை ,
பூங்கா, நகையாடல் ,குளம்,குட்டை,மதில் சுவர்,
இப்படி இயற்கை உடைகள் சூடி கொள்கிறான்


ஆயினும் இயற்கைக்குள் காழ்புணர்ச்சி
இருந்துவிட்டால்...........
இவனின் தொடர்பியல்
எங்கிருந்து துண்டிக்கப்படும் ..............



பிறப்பு
உயிர் குடுக்கும்
மரபணு
உத்வேகமாய் ஊந்திய
ஆசுவாச காற்று ....


வளர்ப்பு
வளர்ந்துவிட்டேன்
தளிரின் செருக்கு
வளரவைத்தேன்
தண்ணீரின் கம்பீரம்

காத்தல்
மரத்தில் கூடுவைத்தேன்
பறவையின் பறைசாடல்
பறவைக்கு இடம் தந்தேன்
மரத்தின் மறுமொழி


அழித்தல்
ஒடிந்து விட்டேன்
சூட்டின் ஆற்றல்
ஒளிந்து கொண்டேன்
நீரின் வல்லமை


இயற்கையாய் பிறந்து
இயற்கையாய் வளைந்து
இயற்கையால் ஒடிந்து
விழும் பட்டு போன
தாவர மனிதம் ....................


















Sunday, 9 January 2011

நத்தை


அர்த்த சாம நிசிகளின்

கடினத்தை உனக்காகவே
இமை பொழுதில் தாங்கி நிற்கிறேன் ..........


இருளுக்கு முரண் வைக்கும்
விடுகதையை சூரியனின் வாசலில்
கடலின் சீற்றமான காலைப்பொழுதுடன்
இணைத்து விட்டாய் ...................


விழிகளின் துவாரத்தில்
ஒற்றை கண்ணினால்
கனவுகளை சுமந்துகொண்டு
உலகை எட்டி பார்க்கிறேன் ....................

யாரோ ஒரு தேவதை
என்னை பிரிந்து
வருத்ததுடன் விடை பெறுகிறாள் ............

சுபத்துடன் பூபாளம் பாடும்
பறவைகள் மரங்களில் இருந்து
மலைகளில் நகர
துள்ளி குதித்து ஓடும்
ஆட்டு குட்டியின் மணியோசை
காதோரமாய் கீறலில்
சிந்தி விழுந்திருந்தது ...................


வயதான பாட்டியின்
கம்பிளி போர்வை
இன்றும் கரை திரும்பும்
அலை என உள்வாங்கியது ................

ஒரு தேனீர் கிடைக்குமா
என்ற பதட்டத்துடன்
உதடுகள் உணர்ச்சியின்று
மரத்தை ஒட்டியிருந்தது ..............


எனக்குள் அப்படியொரு
அசதியை பெற்றதில்லை
இந்த சோம்பேறி பட்டம் ............


இருந்தும் இதை மீறி
அம்மாவின் கூக்குரலுக்கு அப்பால்
நகர்கிறது
இன்றைய வாழ்க்கை நத்தை.................






















Thursday, 6 January 2011

சுற்று சூழல் அறிக்கை

இன்றைய பொழுதின்

இயற்கை சுவாசங்கள்

என்னுள் எழுந்துவிட்டன

நான் உறங்கிய மரணதூக்கதை

சற்று உசிப்பி எழுப்பிவிட்டேன்



மூக்கின் நுனியில் அந்த

பனிக்கூட்டம் புயலாய்

உருவெடுத்து

காற்றுவெளியில் எங்கோ

மற்றொரு மரத்தின்

சுவாச மர்மத்தை வென்றுவிட்டு

சத்தான கனிகளுடன்

ஒளிந்து கொள்கிறது!



கைகள் பறித்து

கூடையில் வைத்து

வியாபாரி ஒருவன்

விலை பேசுகிறான்

என் மூச்சு காற்றை .............



காற்றின் விலை

பத்து ரூபாய் தான்

அது உயிர் குடுக்கும்

என் கனியின் காற்று

யாரிலும் எதிர்த்து விழைமுடியா

சுற்று சூழல் அறிக்கை

அடங்கும் உலகசபை..................

Monday, 3 January 2011

அன்புடையார்க்கு எல்லாம்

அன்பின் அடிவருடியால்


தூரத்தில் நின்று

வெம்புவால் ,

என்றுடன் விருப்பமாய்

என்னை தீண்டுவாய் .......................

கலக்கம் மனகடையில்

தாழிட்டு புறப்பட்ட நேரம் !

செவ்வான ஊஞ்சலில்

சற்று காற்று வேகமாய் வீசிட

தடுமாறி

கம்பியை பிடிக்கும் கையாய்

உருமாறி

உன் அருகில் வந்து நிற்கிறேன்

தோற்றத்தின் வயது

முதுமை,ஆயினும்

அன்பின் ஆளுமை

இன்றும் இனிமை .......................................