Tuesday, 30 November 2010

வடு






சின்னதொரு கீறலில்
உதயமாக இருக்கும்

உதிரத்தின் வாசனையை

நெருங்கிய நண்பன்

துரத்தி வருகிறான் !



முரண்டு பிடிக்கும்

குருதியின் தேடலில்

மெல்ல மெல்ல

காற்றுடன் கைகோர்த்து

வீடு வருகிறான் !



களிம்பு தடவி

நீண்ட நட்பினை

அறுத்தெடுப்பது காலத்தின்

மறைய துடிக்கும் தழும்பு!






Wednesday, 1 September 2010

என்று தணியும்


சீறிவரும் பூங்ககடலே

தினமும்
பல வண்ணத்துப்பூச்சிகள்
உன் நீரலையில்
பறந்து வருகின்றன

கோடையிலும் வாடையிலும்
சாயம்போகா நெஞ்சழுத்த
போராளிகள்
மீன்பூக்களின் மரணத்தை
வென்றெடுக்க
விரைந்து வருகிறார்கள் !

எல்லைகள் கடந்து
வளத்தை அறிதாரமிட்டு
நீ நடத்தும் நாடக கூண்டில்
எத்தனை உயிர்கிளிகள்
அடிக்கப்பட்டு
சிறகொடிக்கப்படுகிறார்கள்!
வீதியில் விளையாடும்
கட்டிப்பிடி சண்டையை
நீலவான சமுத்திரத்தில்
தொடங்கி வைக்கும்
சூத்திரதாறியே

கரையில் கிளத்தியால்
இரவுகளை விலை கேட்கிறாள்
தரையில் பிள்ளைகள்
காலை பொழுதை
காத்திருந்து எதிர்ப்பாக்கிறார்!

இதற்கு மத்தியில்
வேடவன்
துப்பாக்கி கலாச்சாரத்தால்
வண்ணமயமான கனவுகளில்
இருந்து
நெஞ்சில் செங்குருதியோடு
பிழிந்தெடுத்த

மனிதநேய மாற்குண்டுகளுடன்
இருளில் சாந்தமாய்
முற்றுபெற்ற
ஐநூறு தியாக தீபத்தின்
உயிரில்
விட்டு விட்டு எரிகிறதோ
தீபகற்பக விடியல்காலை!


































வாரிசு பிள்ளை



முல்லைப்பூவின் வாசத்தில்
பன்முகம் வைத்து
நீண்டோடிய வசந்தகால
பேரலைகள்

கீற்றுப்பின்னாலாய்
தேகசுகத்தில் மிதந்து வந்து
நறுமணத்தின் எதிரியை
கொணர குடுக்கும்
இருகுருவிகளுக்கு ................

காலமரம்
சின்ன சின்ன சிப்பிகளில்
வந்து விழுந்து
வளம் பாட துடிக்கும்
பவளமுத்துக்களே
தொட்டிலில் ஆடும்
வாரிசு பிள்ளைகள்................

Tuesday, 31 August 2010

வெங்காய உலகம்



ஊரார் கூறுவார்
ஆண்பிள்ளை
அழுதல் சிறுபிள்ளைத்தனம்
வயதால் நிர்ணயிக்கபடுமா

மீறினால்
சிறித்தே பழகிய
உலகம்
குமுறத்தொடங்கும் ஓர்
வெங்காய உரியலில் ..........

பனிப்பூக்கள்


வண்ணத்தை அள்ளி
பூசி கொண்ட
மாலை வெயிலே
தீர்த்தகரையில் மடிசையந்த
ரகசியத்தை
நதியானவள் மறைத்துவிட்டால்

புது சாபத்தின்
விமொச்சம் பெற்றுக்கொண்ட
வெண்ணிலவின் வருகையை  
நட்சத்திரத்தின் காலாட்படை
வரவேற்கையில்

சந்த்ரோதயம் காணும்
பொன்மாலையில்
பனிப்பூக்கள் அடிவருடியாய்
அழுது வடிக்கும்
கண்ணீரை

துடைத்து எடுக்கும்
கைகள் யாருடன் ...............................

Monday, 30 August 2010

புகழி


வளைந்து போகும்
வான்வெளியில்
காற்றில் பறக்குது
இந்த கானல் பறவை

காணாது கண்டான்
செய்தியுடன்

உமிழி வைக்கும்
வாய்வழியே
வந்து இறங்கியுதும்
ஓர் மணிமகுடம்
தலையில் நின்று
வெய்து ஏங்கும்

சற்றொரு நாழிகையில் 
நிழல் இதயத்தில்
உடைந்து தொங்கும்
வெத்துப்  புகழ்!



பேசும் சக்தி


உறக்க பேசும் பழக்கம்
புழுக்கத்தில்
உருமாறிய விதை
தீண்டி தீண்டி

கீறலில் வேர்கொண்டு
வீர்யென்று மெருகேறும்  
ஓர் கடினமான வியப்பு
பேச்சாளன் !

Sunday, 29 August 2010

ஊராம் வீடு


சித்திரை என்றதும்
விழாக்காலம்
சில
ஈர விழிகளை கடந்து
செல்லும் கனாக்காலம்

அதனின் முதல் வாரம்
தேர் இழுத்து
கை பழுத்து
உன் வீடு வருகையில்
நீர் சுமந்து பானையுடன்

நீ வருகையில்
இளமையின் இனிமையை
வருடி கொன்று இருப்பாய்

அடுத்து வாரம்
ஏதொரு சாக்கில்
சந்திக்க நினைத்து
ஆற்றங்கரையின் மணலில்
நிலாச்சோறு கொண்டு
வெண்ணிலா
மண்ணின் மடி இறங்குவாள்

சூடுபட்ட சொற்களால்
உன் உறவினன்
ஏசி பார்த்தும்
திருந்தாத 
நாய்குட்டியாய்
வீடு வரை காவல்
வந்து சென்றிருப்பேன் !

நீர் இறங்கி
விலகி செல்லும்
இலைகள்
தலை அசைத்து
ஒரு சுகத்தை வேண்டுமாம்

குறுக்கும் நெடுக்கும்
இறுதி வாரத்தில்
நத்தையாய் ஊறி
நாணலாய்  வளைந்து
கீற்று கொட்டகையாய்
ஒடிந்து இருப்பேன்

நீயும் ஏறுமுகமிட்டு
ஒரு சொல்லில் கனவுகளை
கலைத்து விட்டாய்

அடுத்த திருவிழாவில்
பார்ப்போமென்று!


நேர்க்காணல்



பொங்கி எழும்
பெருங்கடலே
நீ கடந்து வந்த
சுவடுகளை
என் காதில் செல்லமாக
உரைப்பாயா ?

உன் உச்சியை
தொட்டு பார்க்க
எனக்கும் ஆவலே

இருந்தும் என்னை
மூழ்கடிப்பதிலே
எந்த சுகத்தை
கண்டுவிட்டாய்!

உன் பாதத்தில்
முத்தமிட்டு
என் முகாதரத்தை
துளைத்துவிட்டு

கோடானகோடி சிறுப்பிள்ளைகளில்
ஒருவனாய் திகழ்வதில்
எனக்கும் ஆவலே

நீ
நீலமாய் நிற்கையில்
நீளம் கொண்ட
கண்களுக்கும்
சோகம் தாக்காமல்
அழுகையை
சோதித்து பார்க்கும்
தோழன் நீயன்றோ...............

கரையில் இருந்தால்
அள்ளிக்கொள்கிறாய்
மீறி
உள்ளே  வந்தால்
உலா வந்து
தள்ளிவிடுகிறாய்

உன் விடுகதையின்
விடை என்ன
யார் உனது
உறவாளி  
விஞ்ஞானம் காண
முடியா
நெஞ்சுயிர்  பாட்டி..........................




Friday, 27 August 2010

கர்பிணி சிரிப்புகள்



மலரின் மவுனத்தை
மழலை பற்றி
கையில் பிடித்து
கனவு கண்டு
உறங்கியதாம்

அதிர கனவுகள்
ஆறாம் மாதத்தில்
பிள்ளைக்கு
ஓர் முளை விடும்
பயிர் காலமாம்

திரும்பிய திசையெல்லாம்
வலி குடுக்க
தாய்மை உற்சாக வெளிப்பாடாய்
தடவிக்கொண்டே 
கைவைத்து தட்டுவாலாம்

சும்மா இருக்க
மாட்டியா என்று

கருவறையில் கண்ட
அந்த நிலா உலகம்
இன்று பவுர்ணமியாய்

அவள் முகத்தில்
உதித்து
ஐந்து நாழிகை
கடந்துவிட்டன!

பிள்ளையும் பிறந்து
விட்டான்
அழுகை கொண்டு
சத்தமிட்டு சொன்னான்
நான் இருக்கிறேன்
நீ கலங்காதே !